வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
வரலாற்றுப் பிழை.. மதுபானக்கடைகள் திறப்பை கைவிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்!
கொரோனாவை கட்டுப்படுத்த 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த சமயத்தில் மதுபானக்கடைகளை திறப்பது வரலாற்று பிழையாகப் போகிறது என்று நாம் தமிழர் கட்டி தலைவர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில், தமிழகத்தில் நோய்த்தொற்று சமூகப் பரவலை எட்டியுள்ள நிலையில் மதுபானக்கடைகளைத் திறப்பது கொரோனாவை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பானது.
அத்தகைய வரலாற்றுப் பிழையை செய்து பெரும்பழிக்கு ஆளாக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஆகவே, மதுபானக்கடைகளைத் திறக்கும் முடிவினை உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
வரும் 7ஆம் தேதி முதல் மதுபானக்கடைகளைத் திறக்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. இம்முடிவு 40 நாட்களுக்கு மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கை ஒட்டுமொத்தமாகப் பாழ்படுத்தி, நோய்த்தொற்று பரவலைக் கட்டற்ற நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் பேராபத்தாகும். (1/3)
— சீமான் (@SeemanOfficial) May 4, 2020