இந்திய வம்சாவளியை சேர்ந்த மொத்த குடும்பமும் தீயில் கருகி நொடியில் பலியான சோகம்! பெரும் அதிர்ச்சி சம்பவம்....



indian-family-killed-in-us-car-accident

ஹைதராபாத் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தேஜஸ்வினி மற்றும் ஸ்ரீ வெங்கட் தம்பதியினர், இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவில் வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்தனர்.

இந்திய வம்சாவளியைக் கொண்ட இந்த குடும்பம் சமீபத்தில் அட்லாண்டாவில் வசிக்கும் உறவினரின் வீட்டிற்கு காரில் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் டல்லாஸ் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோது, பயணத்தின் நடுவில் திடீரென ஓர் லாரி மோதியது.

கார் தீப்பிடித்து எரிந்ததால் பரிதாப இறப்பு

விபத்து ஏற்பட்டதும் கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. காரில் இருந்த நான்கு பேரும் – பெற்றோர் மற்றும் குழந்தைகள் – சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இந்த நிகழ்வை அறிந்த அமெரிக்க போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.

இதையும் படிங்க: 10 வருஷமா குழந்தை இல்ல! பெண்ணுக்கு பேய் ஓட்டினால் குழந்தை பிறக்கும்! கழிவுநீர் மற்றும் கழிப்பறை நீரால் மந்திரவாதி செய்த அதிர்ச்சி செயல்! பகீர் சம்பவம்....

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

இந்த பயங்கர சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், இந்தியா மற்றும் அமெரிக்காவிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மாம்பழ விழா! இலவச மாம்பழத்திற்காக குவிந்த மக்கள்! கட்டுப்பாட்டை இழந்து கடைசியில் நடந்த அதிர்ச்சி ! வைரலாகும் வீடியோ..