நேரடி சவால்! அனிரூத்கு போட்டியாக சிறுவர்கள் வெளியிட்ட வீடியோ! போட்டி இரண்டு பேருக்கு மட்டும் தான்.... வைரல் வீடியோ!
சமூக வலைதளங்களில் தற்போது இரண்டு சிறுவர்களின் இசைத் திறமை அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. முன்னணி இசையமைப்பாளர் அனிருத்துக்கு நேரடியாக சவால் விடும் வகையில் அவர்கள் வெளியிட்ட வீடியோ, நெட்டிசன்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
அனிருத்துக்கு சவால் விடும் தேவா
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் தொடர்ந்து ஹிட் பாடல்களை வழங்கி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், தேவா என்ற சிறுவன், கையில் ஒரு சிறிய கீபோர்டுடன், "இரண்டே இரண்டு பேருக்குள்ள தான் போட்டி... அனிருத் சார், இன்னொன்னு என் தம்பி" என சவால் விட்டுள்ளார்.
ஜீவாவின் இசைத் திறமை
தேவா "டேய் ஜீவா வாசிடா" என்று கூறியதும், ஜீவா தனது அபார திறமையை வெளிப்படுத்தினார். "உங்களுக்கு போட்டியா என் தம்பி வருவான் அனிருத் சார்" என தேவா பெருமையுடன் கூறியிருப்பது பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: நள்ளிரவில் நடுரோட்டில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த வேலையை பாருங்க! இணையத்தில் வைரலாகும் வீடியோ...
அண்ணன் – தம்பி நட்பான போட்டி
அதேபோல், ஜீவாவும் தனது அண்ணனை கீபோர்டு வாசிக்க வைத்து, "அனிருத் சாருக்கும் என் அண்ணனுக்கும் தான் போட்டி" என்று க்யூட்டாக தெரிவித்தார். இந்த வைரல் வீடியோ தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அனிருத்தின் ரியாக்ஷன்
இந்த வீடியோ அனிருத் கண்ணிலும் பட்டுள்ளது. அவர் "சூப்பர்டா தம்பி, க்யூட்டீஸ்" என்று கமெண்ட் செய்து சிறுவர்களை பாராட்டியுள்ளார். தயாரிப்பாளர் அதிதி ரவீந்திரநாத்தும் இந்த வீடியோக்கு ஸ்மைலி மூலம் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
சின்ன வயதில் இவ்வளவு பெரிய திறமையை வெளிப்படுத்தும் தேவா – ஜீவா சகோதரர்களின் பயணம், எதிர்காலத்தில் பெரிய மேடைகளில் அவர்களை காணும் நம்பிக்கையை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
