உயிரைக் காக்க பாதுகாப்பு இடங்களுக்கு ஓடுங்கள்! ஜன்னல்கள், கதவுகள் அருகே இருக்காத்தீங்க....துபாய் மக்களின் மொபைல்கு வந்த ஏவுகணை அவசர எச்சரிக்கை செய்தி! பதறவைக்கும் உண்மை பின்னணி!!!



iran-missile-threat-alert-dubai-abu-dhabi

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வளைகுடா நாடுகளில் பாதுகாப்பு எச்சரிக்கைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக துபாய் மற்றும் அபுதாபி பகுதிகளில் ஏவுகணை அச்சுறுத்தல் குறித்த அவசர அறிவிப்புகள் பொதுமக்களிடம் பகிரப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், அதற்குப் பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை அதிகரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக மார்ச் 6ஆம் தேதி துபாய் மற்றும் அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் உள்ள பொதுமக்களின் அலைபேசிகளுக்கு அவசர எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டது.

மக்களுக்கு அனுப்பப்பட்ட அவசர எச்சரிக்கை

அந்த அறிவிப்பில், தற்போதைய சூழ்நிலை காரணமாக ஏவுகணை அச்சுறுத்தல் இருப்பதாகவும், உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடங்களுக்கு செல்லுமாறும், ஜன்னல்கள் மற்றும் கதவுகளிலிருந்து விலகி இருக்குமாறும் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த எச்சரிக்கை பலரிடமும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ஈரான் தலைவர் அயதுல்லா கமேனி இருப்பிடத்தை அமெரிக்கா கண்டுபிடித்தது இப்படி தானா? உளவு பார்க்கும் கருவி.... எதில் தெரியுமா? வெளியான அந்த ரகசிய தகவல்!!!

வான் பாதுகாப்பு படையின் நடவடிக்கை

கடந்த சில நாட்களாக ஈரானிலிருந்து ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக தடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளின் சிதறல்கள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்ததால் சில இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

பாதிப்புகள் மற்றும் உயிரிழப்பு

துபாயின் பாம் ஜுமேரா பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் அருகே சேதம் ஏற்பட்டதாகவும், அபுதாபி விமான நிலையம் அருகில் ஏற்பட்ட தாக்குதலில் ஒரு வெளிநாட்டு நபர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சிலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

விமான சேவைகள் பாதிப்பு

இந்த அசாதாரண சூழ்நிலையால் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டும் பின்பற்றுமாறு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை குறைக்க சர்வதேச நாடுகள் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தொடர்ச்சியாக நடைபெறும் தாக்குதல்கள் வளைகுடா நாடுகளில் வாழும் மக்களிடையே பாதுகாப்பு அச்சத்தை அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

 

இதையும் படிங்க: இஸ்ரேயல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் ! ஒரே ஏவுகணையில் 80 குண்டுகள்..... வானிலே வெடித்து சிதறும்! போர் முடிந்தாலும் மக்களை கொல்லும் அபாய காட்சி!!!