ஈரான் தலைவர் அயதுல்லா கமேனி இருப்பிடத்தை அமெரிக்கா கண்டுபிடித்தது இப்படி தானா? உளவு பார்க்கும் கருவி.... எதில் தெரியுமா? வெளியான அந்த ரகசிய தகவல்!!!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரானைச் சுற்றியுள்ள சமீபத்திய தகவல்கள் உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அயதுல்லா கமேனி தொடர்பான தாக்குதல் தகவல்கள் வெளியாகியுள்ளதால் சர்வதேச கவனம் இந்த விவகாரத்தின் மீது திரும்பியுள்ளது.
அதிரடி தாக்குதல் குறித்து தகவல்
பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரானில் நடத்திய தாக்குதலில் அந்த நாட்டின் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது இருப்பிடத்தைத் துல்லியமாகக் கண்டறிந்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல் ஈரான் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கான காரணம்
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் முயற்சிகளைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு அரசியல் சூழ்நிலையை மேலும் பதற்றமடையச் செய்யக்கூடும் எனவும் மதிப்பிடப்படுகிறது.
இதையும் படிங்க: வேகமாக ஓடுங்க....சைடுல போங்க! கத்தாரில் விழுந்த வெடித்த ஏவுகணை! "ஓ மை காட்" இந்தியர் அலறல் சத்தம்... திக் திக் காட்சி!!!
மொசாட் உளவு தகவல் குறித்த வதந்தி
கமேனியின் இருப்பிடத்தை கண்டறிய இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் விசித்திரமான உத்தியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஈரான் உயர் அதிகாரிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் போல சில உளவு ஏஜெண்டுகள் ஊடுருவியதாக தகவல்கள் பரவி வருகின்றன. அவர்கள் சிகிச்சை அளிக்கும் போது அதிகாரிகளின் பற்களில் மிகச் சிறிய கண்காணிப்பு சாதனங்களை பொருத்தி, அதன் மூலம் கமேனியின் நடமாட்டத்தை கண்காணித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கமேனி பாதுகாப்பு பதுங்கு குழிக்கு செல்ல மறுத்ததே தாக்குதலுக்கு வழிவகுத்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இந்த சம்பவம் மற்றும் உளவு தகவல்கள் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. இதனால் இந்த விவகாரம் சர்வதேச அரசியலில் தொடர்ந்து கவனிக்கப்படும் முக்கிய செய்தியாக மாறியுள்ளது.