"ஜனநாயகன் ரிலீஸில் பழைய ரசிகராக இருக்க விஜய் அனுமதி.?!" அமைச்சர் விக்னேஷ் பேட்டி.!
"ஜனநாயகன் ரிலீஸில் பழைய ரசிகராக இருக்க விஜய் அனுமதி.?!" அமைச்சர் விக்னேஷ் பேட்டி.!
வரும் ஜூலை 23ஆம் தேதி வெளியாகவுள்ள 'ஜனநாயகம்' திரைப்படத்தை முன்னிட்டு அமைச்சர் விக்னேஷ் அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தப் பேட்டியில், "ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் நேரத்தில் மிகவும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார். ஆனால், படம் வெளியாகும் அந்த சில மணி நேரமாவது பழைய ரசிகர்களைப் போல செயல்பட வேண்டும் என்று அவரிடம் அனுமதி கேட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "எங்கள் வாழ்க்கையில் இனி எப்போது முதல் நாள், முதல் காட்சி பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை. அதனால், படம் வெளியாகும் அந்த 3 மணி நேரமாவது எங்களை பழைய ரசிகர்களாக இருக்க முதல்வர் அனுமதிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: என் பையன் என்ன...என்னுடைய பேரனே விஜய்க்குத்தான் ஓட்டு போட்டான்! அடுத்த தலைமுறை அப்படித்தான்.... ஓப்பனாக போட்டு உடைத்த சிவகுமார்...!!!
தொடர்ந்து, "வழக்கமாக நான் படம் பார்க்கும் அதே திரையரங்கில் 'ஜனநாயகன் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்பது என் ஆசை" என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
அமைச்சர் விக்னேஷின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே வேகமாக பகிரப்பட்டு, பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது.
இதையும் படிங்க: இந்த காரணத்திற்காக தான் டான்ஸ் ஆடினேன்..! உண்மையை போட்டு உடைத்த அமைச்சர் விஸ்வநாதன்....!!!