முதல்வர் விஜய்யிடம் இத பத்தி கேட்டீங்களா..? சட்டுன்னு தடுமாறி கீர்த்தி சுரேஷ் சொன்ன அந்த வார்த்தை...! மோதிரம் போட்டு பாராட்டிய இயக்குனர் மிஷ்கின்... பிரஸ் மீட்டில் நடந்த சுவாரஸ்ய காட்சி..!!!
கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் வழக்கறிஞர்களாக நடித்துள்ள சத்தியவான் சாவித்ரி திரைப்படம் நாளை (நவம்பர் 20) திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், நடிகர் விஜய் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் அளித்த பதில் தற்போது கவனம் பெற்றுள்ளது. எதிர்பாராத கேள்வியால் அவர் சற்று தடுமாறியதாகக் கூறப்படும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
விஜய் காட்சி குறித்து எழுப்பப்பட்ட கேள்வி
அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சத்தியவான் சாவித்ரி படத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படம் நீதிமன்றக் கதைக்களத்தை மையமாகக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர் மூத்த எழுத்தாளர் "பொம்மை சாரதி "திடீர் மரணம்...! திரையுலகினர், அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!!
படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகிய பின்னரும் அவரது காட்சிகள் சில திரைப்படங்களில் இடம்பெறுவது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். மேலும், இந்தப் படத்திலும் முதல்வர் விஜய்யின் காட்சி இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டு, அதனைச் சேர்க்க அனுமதி கேட்டார்களா அல்லது படக்குழுவே முடிவு செய்ததா என கீர்த்தி சுரேஷிடம் நேரடியாகக் கேட்டார்.
கேள்விக்கு பதிலளிக்கத் தடுமாறிய கீர்த்தி
எதிர்பாராத கேள்வியால் ஒரு கணம் தடுமாறிய கீர்த்தி சுரேஷ், பின்னர் 'நான் என்ன சொல்லப் போகிறேன்?' என பதிலளித்தார். அவரது இந்தப் பதில் செய்தியாளர் சந்திப்பில் கவனம் பெற்றதுடன், இணையத்திலும் பேசப்பட்டு வருகிறது.
கீர்த்திக்கு மோதிரம் பரிசளித்த மிஷ்கின்
இதே நிகழ்ச்சியில் டோரதி திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்திய நடிப்பைப் பாராட்டி இயக்குநர் மிஷ்கின் அவருக்கு மோதிரம் ஒன்றைப் பரிசளித்தார். அந்தப் படத்தில் நடித்த மற்ற இருவருக்கும் ஏற்கெனவே மோதிரம் வழங்கியதாகவும், கீர்த்தியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்ததால் இன்று பரிசளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Q: Even after #ThalapathyVijay left cinema, you used his scenes in this film. Did Keerthy ask you to include those scenes, or was it your decision..❓
#KeerthySuresh: Naan laam Yenga solla poren..😅 https://t.co/QR0M7TLKa2
— Laxmi Kanth (@iammoviebuff007) November 19, 2026
இதையும் படிங்க: எப்படி ஒரு மனுஷன்யா.. விஜய் ஆண்டனி செருப்பு அணியாமல் இருக்கும் அந்த உண்மையை போட்டு உடைத்த மனைவி! அரங்கையே கண்கலங்கிய அந்த தருணம்...!!!