இப்போ கொளத்தூர் தொகுதி காலி..! மீண்டும் களமிறங்குகிறாரா ஸ்டாலின்? இடைத்தேர்தலில் அடுத்தடுத்து நடக்கப்போகும் டுவிஸ்ட்...!!!



vs-babu-death-kolathur-assembly-vacancy-ATFYQF

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ். பாபு (75) இன்று பிற்பகல் 2.24 மணியளவில் காலமானார். கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக கடந்த செப்டம்பர் 9-ம் தேதி முதல் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதி காலியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டப்பேரவைச் செயலகம் வெளியிட உள்ளது.

ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி பெற்ற வி.எஸ். பாபு

2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட வி.எஸ். பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது அவரது மறைவால் தொகுதி காலியாகியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வடசென்னையில் செல்வாக்கு மிக்க ஒருவரை இடைத்தேர்தல் வேட்பாளராக நிறுத்தலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சற்று முன்.. கொளத்தூர் MLA வி. எஸ். பாபு காலமானார்..! மருத்துவமனைக்கு விரைந்த முதல்வர் விஜய்..! பெரும் சோகத்தில் தொண்டர்கள்..!!!

மறுபுறம், கடந்த தேர்தலில் தோல்வியடைந்த மு.க. ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்துக்குள் நுழைவாரா அல்லது திமுக சார்பில் வேறு மூத்த நிர்வாகி களமிறக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் காலியாகும் 6 தொகுதிகள்

வி.எஸ். பாபுவின் மறைவால், தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. திருச்சி கிழக்கு, பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகள் ஏற்கெனவே காலியாக உள்ள நிலையில், தற்போது கொளத்தூரும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. இதனால் 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் தற்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை 228 ஆகக் குறைந்துள்ளது.

ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை பலத்தில் பாதிப்பில்லை

ஒரு உறுப்பினரை இழந்த போதிலும், தமிழக வெற்றிக் கழகக் கூட்டணியின் ஆட்சிக்கு இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என அரசியல் கணக்குகள் தெரிவிக்கின்றன. ஆளுங்கட்சிக் கூட்டணிக்கு 117 இடங்களுடன், வெளியிலிருந்து 5 உறுப்பினர்களின் ஆதரவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. பெரும்பான்மைக்குத் தேவையான 115 இடங்களை விட அதிக ஆதரவு இருப்பதால், சட்டமன்றத்தில் ஆட்சியின் பலம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: # BREAKING : பெரும் பரபரப்பு.. மருத்துவமனைக்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் வி.எஸ். பாபுவின் உறவினர்கள்..! இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!!