சற்று முன்.. கொளத்தூர் MLA வி. எஸ். பாபு காலமானார்..! மருத்துவமனைக்கு விரைந்த முதல்வர் விஜய்..! பெரும் சோகத்தில் தொண்டர்கள்..!!!
சென்னை கொளத்தூர் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு (75) இன்று காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த 72 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2.24 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
72 நாட்களாக தீவிர சிகிச்சை
நுரையீரல் தொற்று காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட வி.எஸ். பாபு, சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 72 நாட்களாக மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவு குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. இன்று பிற்பகல் 2.24 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு விரைந்த முதலமைச்சர் விஜய்
வி.எஸ். பாபுவின் மறைவுச் செய்தி தமிழக அரசியல் வட்டாரத்திலும், தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மறைந்த சட்டமன்ற உறுப்பினரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக முதலமைச்சர் விஜய் எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
இதையும் படிங்க: 2 மாதம் தீவிர சிகிச்சை! எழுந்து நின்றவர்.. தொற்று அதிகரித்ததால் மீண்டும் படுத்த படுக்கையான வி.எஸ். பாபு..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!!!