என்ன..? செத்த பொண்ணு கத்துதா..? மின்சார தகன உலைக்குள் வைக்கப்பட்ட சில நொடிகளில் கேட்ட அலறல் சத்தம்..! அதிர்ச்சி வீடியோ..!!!



viral-video-woman-crying-cremation-furnace-claim

இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு பெண், மின்சார தகன உலைக்குள் வைக்கப்பட்ட பிறகு அலறியதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இறுதிச் சடங்குக்காக தகன மையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பெண்ணிடம் இருந்து அலறல் சத்தம் கேட்டதாம். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உலையின் கதவைத் திறக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. 

தகன உலைக்குள் அலறல் சத்தம் கேட்டதாக வைரல் பதிவு

சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளியுடன் பகிரப்படும் தகவலின்படி, உயிரிழந்துவிட்டதாகக் கருதப்பட்ட பெண்ணை அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குக்காக தகன மையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மின்சார தகன உலைக்குள் வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதையும் படிங்க: சொல்லியும் கேட்காத மக்களுக்கு இப்படித்தான் செய்யணும்..! இளைஞர் வைத்த குங்குமத்தின் மகிமையை பாருங்க... தீயாய் பரவும் வீடியோ..!!!

இதனால் அங்கிருந்தவர்கள் ஏதோ தவறு நடந்துவிட்டதாக உணர்ந்து, உலையின் கதவைத் திறந்து பெண்ணைக் காப்பாற்ற முயற்றதாக கூரப்படுகிறது.  இருப்பினும், காணொளியில் இடம்பெற்றுள்ள காட்சிகள் இந்தக் கூற்றுகளை உறுதிப்படுத்தும் வகையில் இல்லை.

சம்பவத்தின் இடம், பெண்ணின் அடையாளம் தெரியவில்லை

இந்தக் காணொளி எங்கு எடுக்கப்பட்டது, அதில் இடம்பெற்றுள்ள பெண் யார், எந்தத் தகன மையத்தில் இந்த நிகழ்வு நடந்ததாகக் கூறப்படுகிறது என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்கள் தெரியவில்லை. காணொளி பதிவு செய்யப்பட்ட தேதி மற்றும் அதன் பின்னணி குறித்த விவரங்களும் தெளிவாக இல்லை.

உறுதிப்படுத்தப்படாத தகவலை நம்ப வேண்டாம்

அந்தப் பெண் தகன உலைக்குள் வைக்கப்பட்டபோது உயிருடன் இருந்தார் என்பதையோ, கேட்கப்பட்டதாகக் கூறப்படும் அலறல் சத்தம் அவரிடமிருந்து வந்தது என்பதையோ வைரல் காணொளி உறுதிப்படுத்தவில்லை. 

 

இதையும் படிங்க: பைத்தியக்காரத்தனம்...! வெடிப் பெட்டியைத் தலையில் தூக்கி வைத்துத் தீ வைத்து வெடித்த பெண்! இறுதியில் நடந்ததை பாருங்க... ஷாக் வீடியோ..!!!