த்ரிஷாவுக்கு வாழ்க்கையில் அது நடக்கவே நடக்காது..! ஜோதிடரின் பகீர் கணிப்பைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!!!
நடிகை த்ரிஷாவின் திருமணம் குறித்து பெண் ஒருவர் வெளியிட்டுள்ள கணிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத்தின் திருமணம் குறித்து கணித்த அந்தப் பெண், த்ரிஷா எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ள வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.
த்ரிஷா திருமணம் குறித்து வெளியான கணிப்பு
அந்த வீடியோவில், த்ரிஷா தற்போது இருப்பதைப் போலவே தனது திரை வாழ்க்கையில் தொடர்ந்து கவனம் செலுத்துவார் என்றும், எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் அந்தப் பெண் கூறியுள்ளார். மேலும், திருமணம் வேண்டாம் என்ற முடிவை த்ரிஷா ஏற்கனவே எடுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தக் கருத்துகளுக்கு த்ரிஷா தரப்பில் எந்த உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: ஜப்பானில் விநோத ஹோமம்..! ரகசிய தீபாவளி சடங்கின் பின்னணி... விஜய் தேவர்கொண்டாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!!!
ரசிகர்கள் நகைச்சுவையான கருத்துகள்
த்ரிஷாவின் திருமணம் குறித்த இந்தக் கணிப்பு வெளியானதும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர், “அப்போ மாப்பிள்ளை நாங்க கிடையாதா?” என நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகின்றனர். திரையுலகில் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா குறித்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.