தீபாவளி நாளில் விடிய விடிய கொலையில் உறைந்த தமிழகம்! போலீஸ்ஸே பரிதாப பலி... பகீர் பின்னணி..!!!



tamil-nadu-diwali-day-murders

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நாளில் அடுத்தடுத்து நடந்த கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தேனி, திருச்சி, பெரம்பலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடந்த மோதல்களில் காவல்துறை அதிகாரி உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறு, முன்விரோதம், மதுபோதை உள்ளிட்டவை இந்தக் கொலைகளுக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.

தேனியில் தட்டிக்கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை

தேனி மாவட்டத்தில் நடுரோட்டில் பட்டாசு வெடித்து, அதனை வீடியோ எடுத்து ரீல்ஸ் செய்து கொண்டிருந்த போதையில் இருந்த சிலரை சிறப்பு உதவி ஆய்வாளர் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் அவர் தாக்கப்பட்டு உயிரிழந்தார். காவல்துறை அதிகாரி உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 22 நாட்களுக்கு மேல் ஆகிட்டு..! வெவ்வேறு திசைகளில் சென்று மீண்டும் வீட்டுக்கே திரும்பும் விசாரணை...! செஞ்சி சிறுமி வழக்கில் என்னதான் நடந்தது...? நாளுக்கு நாள் அதிர்ச்சி...!!!

திருச்சி, பெரம்பலூரில் அடுத்தடுத்து உயிரிழப்புகள்

திருச்சி சுங்கச்சாவடி அருகே வாய்க்கால் கரையோரம் சென்ற இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், பெரம்பலூரில் கோவில் வளாகத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவங்கள் அந்தந்த பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தின. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் போலீசார் விசாரணை

சென்னை, கடலூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மதுபோதையில் ஏற்பட்ட தகராறுகள் மற்றும் முன்விரோதம் காரணமாக இளைஞர்கள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எனப் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர் கொலைகள் தொடர்பாக பல்வேறு இடங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகளுடன், ஒவ்வொரு சம்பவத்தின் பின்னணி குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதையும் படிங்க: 7 வயது சிறுமி மாயமான வழக்கில்... அடுத்த 3 நாளில் சிபிசிஐடி உடைக்கப்போகும் மர்மம்! ரகசிய விசாரணையில் சிக்கிய முக்கிய ஆதாரம்... செஞ்சி சிறுமி வழக்கில் அதிரடி காட்டும் சிபிசிஐடி..!!!