எப்படி ஒரு மனுஷன்யா.. விஜய் ஆண்டனி செருப்பு அணியாமல் இருக்கும் அந்த உண்மையை போட்டு உடைத்த மனைவி! அரங்கையே கண்கலங்கிய அந்த தருணம்...!!!
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி செருப்பு அணியாமல் இருப்பதற்குப் பின்னால் இருக்கும் உருக்கமான காரணத்தை அவரது மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி பகிர்ந்துள்ளார். ‘அப்பா குட்டி’ திரைப்பட விழாவில் பேசிய அவர், மகள் மீராவின் நினைவாக விஜய் ஆண்டனி எடுத்த முடிவு குறித்துப் பேசினார். அவர் தெரிவித்த தகவல் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
மகளுக்காக வாங்கி வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட ஷூக்கள்
விஜய் ஆண்டனி - பாத்திமா தம்பதியின் மூத்த மகள் மீரா, உயிரிழப்பதற்கு முன்பு கல்லூரிக்குச் செல்லத் தயாராகி வந்தார். இதற்காக அவருக்குப் பொருத்தமான 50-க்கும் மேற்பட்ட ஷூக்களை வாங்கி வைத்திருந்ததாக பாத்திமா தெரிவித்தார்.
ஆனால், அந்த ஷூக்களை அணியும் வாய்ப்பு மீராவுக்குக் கிடைக்கவில்லை. மகள் பயன்படுத்தாமல் விட்டுச் சென்ற காலணிகளைப் பார்க்கும்போதெல்லாம் விஜய் ஆண்டனிக்கு வேதனை ஏற்பட்டுள்ளது. இதனால், இனிமேல் தானும் செருப்பு அணியப் போவதில்லை என்று அவர் முடிவெடுத்ததாக பாத்திமா உருக்கமாகக் கூறினார்.
மகளின் நினைவாக அணியும் கைக்கடிகாரம்
மகள் மீராவின் நினைவாக விஜய் ஆண்டனி இன்றுவரை ஒரு பொருளை மட்டும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். மீரா கடைசியாக அணிந்திருந்த கைக்கடிகாரத்தையே அவர் தற்போது வரை அணிந்து வருவதாக பாத்திமா தெரிவித்தார்.
மகளை இழந்த துயரத்தையும், அவருடன் தொடர்புடைய பொருட்களை நினைவாகப் பாதுகாத்து வரும் விஜய் ஆண்டனியின் உணர்வுகளையும் பாத்திமா பகிர்ந்துகொண்டது திரைப்பட விழாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: அடேங்கப்பா...! ஒரே நாளிலே 4.4 கோடி வியூஸ்... ஷாருக்கான் பாடலுக்கு டான்ஸ் ஆடிய குட்டி சிறுமி! இணையத்தை கலக்கும் வீடியோ...!!!