பைத்தியக்காரத்தனம்...! வெடிப் பெட்டியைத் தலையில் தூக்கி வைத்துத் தீ வைத்து வெடித்த பெண்! இறுதியில் நடந்ததை பாருங்க... ஷாக் வீடியோ..!!!



woman-holds-firecracker-box-over-head

Eதீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதில் சிலர் காட்டும் அலட்சியம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண் ஒருவர் பட்டாசுப் பெட்டியைத் தலையில் தூக்கிப் பிடித்து வெடிக்கச் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆபத்தை உணராமல் அவர் செய்த செயல் பலரையும் அதிர வைத்துள்ளது.

தலையில் பட்டாசுப் பெட்டியைத் தூக்கிப் பிடித்த பெண்

வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு பெண் தனது வீட்டின் மாடியில் நின்றுகொண்டு பெரிய வெடிகள் அடங்கிய பெட்டியை கையில் வைத்திருக்கிறார். அப்போது சிறுவன் ஒருவன் அந்தப் பெட்டிக்குத் தீ வைக்கிறான். பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியதும், பெண் அந்தப் பெட்டியைக் கீழே வைக்காமல் தலையின் மேல் தூக்கிப் பிடிக்கிறார்.

இதையும் படிங்க: நல்ல வேலை.. ஏதோ புருஞ்சுருக்கு! சாதாரணமாக நடந்த விஷயம்.. ஆனால் சிசிடிவி காட்சிகளைப் பார்த்ததும் கண்ட அதிர்ச்சி! வைரலாகும் மர்ம வீடியோ...!!!

அடுத்தடுத்து வெடிகள் வானத்தை நோக்கிச் சீறிப் பாய்கின்றன. சில நொடிகளில் தீ அதிகரித்து, பெட்டி முழுவதும் தீப்பற்றத் தொடங்குகிறது. இதனால் பதறிப்போன அந்தப் பெண், உடனடியாகப் பெட்டியைத் தரையில் வீசிவிட்டு அலறியபடி அங்கிருந்து ஓடுகிறார்.

வீடியோ வைரலானதால் நெட்டிசன்கள் கண்டனம்

சில நொடிகளில் நடக்கும் இந்தக் காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. இதைப் பார்த்த பலரும் பெண்ணின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பட்டாசு வெடிப்பதில் இத்தகைய அலட்சியம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த வீடியோ மீண்டும் உணர்த்தியுள்ளது. சில நொடிப் பொழுதுபோக்குக்காக உயிரைப் பணயம் வைக்கும் இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

 

இதையும் படிங்க: அவுங்களும் மனுஷங்க தானே..! எவ்வளவு கஷ்டம்... 12 மணி நேரம் வேலை..! கால் வீங்கியும் கொஞ்சம் கூட அசையல... பெண் வெளியிட்ட கோரிக்கை வீடியோ !!!