எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர் மூத்த எழுத்தாளர் "பொம்மை சாரதி "திடீர் மரணம்...! திரையுலகினர், அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!!



veteran-journalist-bommai-sarathi-passes-away

தமிழ் திரையுலகின் மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான 'பொம்மை' சாரதி, 93 வயதில் வயது மூப்பு காரணமாகக் காலமானார். 'பொம்மை', 'மங்கை' உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், தமிழ் சினிமா இதழியல் துறையில் தனி இடத்தைப் பிடித்தவர். அவரது மறைவு பத்திரிகை மற்றும் திரையுலக வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொம்மை, மங்கை இதழ்களின் ஆசிரியர்

சினிமா இதழியல் துறையில் நீண்ட காலம் பணியாற்றிய சாரதி, தமிழ் திரையுலகின் வளர்ச்சியையும் அதன் பொற்கால வரலாற்றையும் தனது எழுத்துகள் மூலம் பதிவு செய்தார். 'பொம்மை', 'மங்கை' ஆகிய புகழ்பெற்ற இதழ்களில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்த அவர், பத்திரிகைத் துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.

இதையும் படிங்க: எப்படி ஒரு மனுஷன்யா.. விஜய் ஆண்டனி செருப்பு அணியாமல் இருக்கும் அந்த உண்மையை போட்டு உடைத்த மனைவி! அரங்கையே கண்கலங்கிய அந்த தருணம்...!!!

எம்.ஜி.ஆருடன் நெருக்கமான நட்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் சாரதி நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். அவருடனான அனுபவங்களையும், எம்.ஜி.ஆரின் ஆளுமையையும் பதிவு செய்யும் வகையில் 'மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்', 'வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர்' ஆகிய இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

திரையுலகினர், அரசியல் தலைவர்கள் இரங்கல்

தமிழ் இதழியல் துறைக்கு முக்கிய பங்களிப்பு செய்த சாரதியின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள், மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது எழுத்துப் பணிகளையும், தமிழ் சினிமா வரலாற்றைப் பதிவு செய்த பங்களிப்பையும் பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: இது அரசியல் நிகழ்ச்சி போல இருக்கு! தனுஷ் ப்ரோ அரசியலுக்கு போங்க..... ஆனால் விஜய் சார் மாதிரி பண்ணிடாதீங்க! தனுஷுடம் சாய் பல்லவி சொன்ன அந்த ஒரு வார்த்தை... வைரல் வீடியோ..!!!