அள்ள அள்ள குறையாத அன்பு! காரில் போகும் போது காதல் கணவர் அஜித் ஷாலினியிடம் சொன்ன அந்த 3 வார்த்தை..! இணையத்தைக் கலக்கும் வீடியோ..!!!



ajith-shalini-long-drive-video-viral

நடிகர் அஜித் குமாரும் அவரது மனைவி ஷாலினியும் காரில் நீண்ட தூரம் பயணம் செய்யும் அழகான தருணத்தை ஷாலினி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோவில் அஜித் 'I LOVE YOU' எனக் கூறும் காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

காரில் லாங் டிரைவ்.. ஷாலினி பகிர்ந்த வீடியோ

ஷாலினி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கணவர் அஜித் குமாருடன் காரில் பயணிக்கும் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், 'Music, love & a long drive..' எனக் காதல் நிறைந்த வாசகத்துடன் இதயக் குறியீடுகளையும் இணைத்துள்ளார்.

இதையும் படிங்க: என்ன.. இப்படி சொல்லிட்டாரே! துக்க வீட்டில் வாயை விட்டு உளறிய கூல் சுரேஷ்..!!!

வீடியோவில் பின்னணியில் காதல் பாடல் ஒலிக்க, ஷாலினி வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அஜித் அவரைப் பார்த்து 'I LOVE YOU' என்று கூறும் தருணம் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

வைரலாகும் அன்பான தருணம்

பொதுவாக தங்களது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகம் பகிராத அஜித் - ஷாலினி ஜோடி, இந்த வீடியோ மூலம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்துள்ளனர். பதிவிட்ட சில நேரங்களிலேயே வீடியோ சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது.

ரசிகர்கள் பலரும் வீடியோவைப் பகிர்ந்து, 'என்றென்றும் எவர்கிரீன் ஜோடி', 'காதலுக்கு சிறந்த உதாரணம்' என கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அமர்க்களம் படத்தில் தொடங்கிய காதல்

1999-ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்தபோது அஜித் குமாரும் ஷாலினியும் காதலிக்கத் தொடங்கினர். தொடர்ந்து, 2000-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகிய ஷாலினி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், அஜித்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட இந்த வீடியோவை அவர் பகிர்ந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: என்ன.. இப்படி சொல்லிட்டாரே! துக்க வீட்டில் வாயை விட்டு உளறிய கூல் சுரேஷ்..!!!