நள்ளிரவில் தானாகவே இயங்கிய எலக்ட்ரிக் கார்! ஒரே இரவில் 868 முறை பார்க்கிங் செய்ய முயற்சி... காலை எழுந்து பார்த்த உரிமையாளருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி! ஷாக் வீடியோ..!!!



china-electric-car-automatic-parking-868-times

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில், ஓட்டுநர் இல்லாத எலக்ட்ரிக் கார் ஒன்று நள்ளிரவில் தானாக இயங்கி மீண்டும் மீண்டும் பார்க்கிங் செய்ய முயன்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் நடந்த இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மறுநாள் காரின் செயல்பாட்டுப் பதிவுகளைப் பார்த்த உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

நள்ளிரவில் தானாக இயங்கிய எலக்ட்ரிக் கார்

அன்ஹுய் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் அடித்தள பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த எலக்ட்ரிக் கார், நள்ளிரவில் திடீரென தானாக இயங்கத் தொடங்கியுள்ளது. காருக்குள் ஓட்டுநர் யாரும் இல்லாத நிலையில், பார்க்கிங் இடத்துக்குள் முன்னும் பின்னுமாக நகர்ந்து சரியான இடத்தில் நிறுத்த முயற்சி செய்துள்ளது.

இதையும் படிங்க: நெஞ்சே பதறுது! கொதிக்கும் எரிமலை குகைக்குள் நுழைந்த நபர்..! ஆனால் இறுதியில் அம்பலமான அதிர்ச்சி உண்மை..! பகீர் வீடியோ..!!!

ஒருமுறை முயற்சி செய்ததோடு நிற்காமல், தொடர்ந்து நகர்ந்து மீண்டும் பார்க்கிங் செய்யும் செயல்பாட்டில் அந்த கார் ஈடுபட்டுள்ளது.

ஒரே இரவில் 868 முறை பார்க்கிங் முயற்சி

மறுநாள் காலையில் காரின் செயல்பாட்டுப் பதிவுகளை உரிமையாளர் சரிபார்த்துள்ளார். அப்போது, இரவு முழுவதும் காரின் தானியங்கி பார்க்கிங் வசதி சுமார் 868 முறை செயல்பட்டிருந்தது தெரியவந்தது. இதைப் பார்த்த அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தொழில்நுட்ப கோளாறா?

காரின் தானியங்கி பார்க்கிங் வசதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது சென்சார் பிழை காரணமாக இந்த நிகழ்வு நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்த வீடியோவும் தகவல்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

இதையும் படிங்க: என் உயிரே போனாலும் என்னோட உடம்பை தொட விடமாட்டேன்...! ஹோட்டல் அறையில் பெண்ணிடம் நெருங்கி வந்த மேற்பார்வையாளர்... அடுத்த நொடி மாடியில் இருந்து குதித்த பெண்! பதறவைக்கும் காட்சி...!!!