3 மாத மர்மத்தை 6 மணி நேரத்தில் உடைத்த போலீஸ்! நள்ளிரவு ரயில் பெட்டியில் அரங்கேறிய பயங்கரம்... ஒத்த பாம்பு மோதிரம் செய்த மந்திரம்! நாகர்கோவிலில் நடந்த சம்பவம்..!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பயன்படுத்தப்படாத ரயில் பெட்டியில், 54 வயது மதிக்கத்தக்க பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 மணி நேரத்திற்குள் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். அடையாளம் தெரியாத பெண்ணின் உடலைக் கண்டுபிடித்த போலீசார், தங்க மோதிரம் மற்றும் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணையில் முக்கிய முன்னேற்றத்தை ஏற்படுத்தினர்.
ரயில் பெட்டியில் பெண்ணின் சடலம்
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பயன்பாட்டில் இல்லாத ரயில் பெட்டியில் கடந்த நவம்பர் 13-ஆம் தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். நள்ளிரவில் அந்தப் பெட்டியைச் சுத்தம் செய்யச் சென்ற ரயில்வே ஊழியர், பெண்ணின் உடலைப் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு விசாரணையைத் தொடங்கினர்.
இதையும் படிங்க: தந்தை மறைவால் தவித்த மாணவி! அப்பா இல்லாம என்னால இருக்க முடியல... தந்தை இறந்த அதே இடத்தில் மகளும் உயிரிழப்பு! நெஞ்சை கலங்க வைக்கும் பின்னணி..!!!
தங்க மோதிரம் மூலம் அடையாளம் கண்ட போலீசார்
உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தை உறுதி செய்வதில் ஆரம்பத்தில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது சம்பவ இடத்தில் கிடந்த பாம்பு உருவம் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் போலீசாருக்கு முக்கிய தடயமாக அமைந்தது. மோதிரத்தில் இருந்த ஹால்மார்க் முத்திரை மற்றும் பான் எண் விவரங்களை வைத்து விசாரித்ததில், அது குஜராத்தில் தயாரிக்கப்பட்டு சத்தீஸ்கர் வழியாக விற்பனை செய்யப்பட்டதாகத் தெரியவந்தது.
இதன் மூலம் உயிரிழந்த பெண் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும், அவர் கடந்த 3 மாதங்களாக தனது சொந்த ஊரில் காணாமல் போயிருந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
சிசிடிவி காட்சிகள் மூலம் 6 மணி நேரத்தில் கைது
இதையடுத்து ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சம்பவம் நடந்த ரயில் பெட்டியிலிருந்து ஒருவர் வெளியே வருவது பதிவாகியிருந்தது. ரயில் நிலையத்தில் யாசகம் பெற்று வந்த அந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், அவரிடம் இருந்து ரத்தக்கறை படிந்த சட்டையையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்த 6 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: போடு வெடிய! பொங்கல் பரிசுத்தொகை... ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பணம்..? முதல்வர் விஜய் போடும் அதிரடி ஆலோசனை திட்டம்..!!!