போடு வெடிய! பொங்கல் பரிசுத்தொகை... ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பணம்..? முதல்வர் விஜய் போடும் அதிரடி ஆலோசனை திட்டம்..!!!



pongal-cash-gift-ration-card-holders

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், வரும் பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணம் வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பண்டிகை காலத்தில் குடும்பங்களின் செலவுச் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ரொக்கப் பரிசு வழங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் தேவையான நிதி ஆதாரங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யுமாறு நிதித்துறை மற்றும் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் தற்போதைய நிதிநிலையை கருத்தில் கொண்டு, திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் அரசு ஆராய்ந்து வருகிறது.

இதையும் படிங்க: BREAKING: ஷாக் நியூஷ்! அன்றைய நாட்களில் இனி டாஸ்மாக் கடைகள் இயங்காது...! தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு...!!!

ரூ.2,000 அல்லது ரூ.3,000 வழங்க வாய்ப்பு?

அதிகாரிகளுடன் நடைபெறும் ஆலோசனைகளின் அடிப்படையில், பொங்கல் பரிசுத் திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தகுதியுள்ள ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.2,000 அல்லது ரூ.3,000 வரை ரொக்கப் பணம் வழங்கப்படலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரிகள் ஆலோசனைக்குப் பிறகு அறிவிப்பு

இத்திட்டம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. இதனால், பொங்கல் பண்டிகைக்கான ரொக்கப் பரிசு எவ்வளவு, யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்த தெளிவான அறிவிப்பு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே தெரியவரும்.

 

இதையும் படிங்க: உச்சக்கட்ட கொடூரம்! ரயில் சீட்டுக்கு அடியில் அழுகி கிடந்த பெண்ணின் சடலம்! சிசிடிவி காட்சியில் சிக்கிய வாலிபர்..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி உண்மை..!!!