உச்சக்கட்ட கொடூரம்! ரயில் சீட்டுக்கு அடியில் அழுகி கிடந்த பெண்ணின் சடலம்! சிசிடிவி காட்சியில் சிக்கிய வாலிபர்..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி உண்மை..!!!
நாகர்கோவில் ரயில் நிலைய யார்டில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயில் பெட்டிக்குள் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 11-ம் தேதி முதல் யார்டில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டியில், இருக்கைக்கு அடியில் பெண்ணின் சடலம் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரயில் பெட்டிக்குள் துர்நாற்றம்.. இருக்கைக்கு அடியில் சடலம்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரிக்கு வரும் ரயில்கள் அடுத்த பயணத்துக்காக ரயில் நிலைய யார்டில் சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 11-ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து வந்த பயணிகள் ரயில் பெட்டிகள் யார்டில் நிறுத்தப்பட்டிருந்தன. நாகர்கோவிலில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு புறப்படவிருந்த ரயிலுக்காக பெட்டிகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: 40 நாட்களாக நீடிக்கும் மர்மம்! செஞ்சி சிறுமி வழக்கில் 10 பேரை சுற்றிவளைத்த சிபிசிஐடி..!!!
அப்போது ஒரு பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று சோதனை செய்தனர். அங்கு இருக்கைக்கு அடியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்தது. இதையடுத்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பெண் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டது.
சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கிய வாலிபர்
பெண்ணின் அடையாளம் மற்றும் அவர் இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, ரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகத்திற்குரிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பெண்ணை ரயில் பெட்டிக்குள் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்ததாகவும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்த பின்னர் பெண்ணின் உடலை இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு அந்த வாலிபர் தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: நகை கொள்ளை வழக்கில் அடுத்தடுத்து நிஷாந்த் சொல்லும் அதிர்ச்சி வாக்குமூலங்கள்! மீனாட்சி தாயாரிடம் விசாரணை நடத்த ஏற்பாடு..!!!