டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போடா போன பெண்! கணவன் செய்த அந்த ஒரு சைகை ... அடுத்த நடந்த காட்சியை பாருங்க! வைரலாகும் வீடியோ..!!!
விவாகரத்து ஆவணங்களில் கையெழுத்திடத் தயாரான பெண், கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டு கணவரைக் கட்டிப்பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, வங்காளதேசத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுவரை 1.80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கையெழுத்திட வந்த பெண் எடுத்த திடீர் முடிவு
வைரலாகும் வீடியோவில், மேஜையின் முன் அமர்ந்திருக்கும் பெண் விவாகரத்து ஆவணங்களில் கையெழுத்திட பேனாவை கையில் வைத்திருக்கிறார். அவருக்கு சற்று தொலைவில் கணவர் நின்றுகொண்டிருக்கிறார். அப்போது அவர் தனது மனைவியை நோக்கி ஒரு சைகை செய்கிறார். அந்த சைகை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதையும் படிங்க: என்ன..? செத்த பொண்ணு கத்துதா..? மின்சார தகன உலைக்குள் வைக்கப்பட்ட சில நொடிகளில் கேட்ட அலறல் சத்தம்..! அதிர்ச்சி வீடியோ..!!!
ஆனால், அடுத்த சில நொடிகளில் காட்சியே மாறுகிறது. கையெழுத்திடாமல் பேனாவைக் கீழே வைத்த அந்தப் பெண், எழுந்து கணவரை நோக்கிச் செல்கிறார். பின்னர் அவரை இறுகக் கட்டிப்பிடித்துக்கொள்கிறார். இருவரும் ஒருவரையொருவர் அணைத்துக்கொள்ளும் இந்த தருணம் வீடியோவில் பதிவாகியுள்ளது.
வைரல் வீடியோவுக்கு குவியும் கருத்துகள்
இந்த வீடியோவைப் பார்த்த பலரும், கருத்து வேறுபாடுகளை மறந்து உறவுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்க அந்தப் பெண் எடுத்த முடிவைப் பாராட்டி வருகின்றனர். கடினமான சூழலிலும் புரிதல், பொறுமை ஆகியவை உறவில் முக்கியம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நல்ல வேலை.. ஏதோ புருஞ்சுருக்கு! சாதாரணமாக நடந்த விஷயம்.. ஆனால் சிசிடிவி காட்சிகளைப் பார்த்ததும் கண்ட அதிர்ச்சி! வைரலாகும் மர்ம வீடியோ...!!!