ஓடும் பேருந்தில் 14 வயது சிறுவனுக்கு நடந்த அதிர்ச்சி! மாமா, நான் திருடவில்லை.. ஓங்கி அறைந்த கண்டக்டர்..! அப்புறம் என்னுடைய பணம் எங்கே..? இறுதியில் பெண் காட்டிய வீடியோவால் வெளிவந்த நெஞ்சை உலுக்கும் உண்மை..!!!
ஓடும் பேருந்தில் ரூ.1,200 காணவில்லை எனக் கூறி, 14 வயது சிறுவனை நடத்துநர் கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்தியுள்ளார். தான் திருடவில்லை என அழுது கொண்டே சிறுவன் மறுத்தபோதும், பயணிகள் சிலரும் அவரைத் திருடன் எனத் திட்டியுள்ளனர். ஆனால், பேருந்தில் இருந்த பெண் ஒருவர் செல்போனில் காட்டிய வீடியோ, சிறுவன் மீதான குற்றச்சாட்டை பொய்யாக்கியது. இதையடுத்து பேருந்தில் இருந்த அனைவரும் அமைதியடைந்தனர்.
பணம் காணவில்லை என சிறுவனைத் தாக்கிய நடத்துநர்
பேருந்தில் பயணம் செய்த நடத்துநர் தனது சட்டைப் பையில் வைத்திருந்த ரூ.1,200 காணவில்லை எனக் கூறி, 14 வயது சிறுவனை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்துள்ளார். பின்னர், அனைவரின் முன்னிலையிலும் சிறுவனின் கன்னத்தில் அறைந்து, 'இங்கேயே இறங்கு, இனிமேல் இந்தப் பேருந்தில் உன்னைப் பார்க்கக் கூடாது' எனக் கடுமையாகத் திட்டியுள்ளார்.
தான் எந்தப் பணத்தையும் திருடவில்லை எனக் கூறிய சிறுவன், தனது சட்டைப் பைகளை காட்டி அழுதுள்ளார். ஆனாலும், பேருந்தில் இருந்த சில பயணிகள் அவரைத் திருடன் எனக் கூறி திட்டியுள்ளனர். அந்த நேரத்தில் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் எழுந்து, பேருந்தை நிறுத்துமாறு நடத்துநரிடம் கூறியுள்ளார்.
செல்போன் வீடியோவில் வெளிப்பட்ட உண்மை
சிறுவன் எங்கும் இறங்க மாட்டான் எனக் கூறிய அந்தப் பெண், தனது செல்போனில் பதிவாகியிருந்த வீடியோவை நடத்துநரிடம் காட்டியுள்ளார். அதில், நடத்துநரின் சட்டைப் பையில் இருந்த ரூ.1,200 அவருக்குத் தெரியாமல் கீழே விழுந்ததும், அதை எடுத்த சிறுவன் திருப்பிக் கொடுக்க வைத்திருந்ததும் தெளிவாகப் பதிவாகியிருந்துள்ளது.
வீடியோவைப் பார்த்ததும் நடத்துநர் உண்மையை உணர்ந்து, அனைவரின் முன்னிலையிலும் சிறுவனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், நடந்த அவமானத்தால் சிறுவன் தொடர்ந்து அழுதுகொண்டிருந்தார்.
‘இன்னும் என்னை திருடன் போல பார்க்கிறார்கள்’
சிறுவனிடம் ஏன் இன்னும் அழுகிறாய் என அந்தப் பெண் கேட்டபோது, 'அத்தை, பணம் கிடைத்துவிட்டது. ஆனால் பேருந்தில் இருப்பவர்கள் இன்னும் என்னை ஒரு திருடனைப் போலவே பார்க்கிறார்கள்' என வேதனையுடன் கூறியுள்ளார்.
சிறுவனின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் பேருந்தில் இருந்தவர்கள் அமைதியாகினர். தவறான குற்றச்சாட்டால் ஒரு சிறுவன் அனுபவித்த அவமானம், அங்கிருந்த பயணிகளின் கவனத்தை ஈர்த்ததாகக் கூறப்படும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பேசப்படும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: என்ன..? செத்த பொண்ணு கத்துதா..? மின்சார தகன உலைக்குள் வைக்கப்பட்ட சில நொடிகளில் கேட்ட அலறல் சத்தம்..! அதிர்ச்சி வீடியோ..!!!