40 நாட்களாக நீடிக்கும் மர்மம்! செஞ்சி சிறுமி வழக்கில் 10 பேரை சுற்றிவளைத்த சிபிசிஐடி..!!!



hemalatha-missing-girl-case-cbcid-investigation

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 40 நாட்களுக்கும் மேலாக சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம், செங்கல் சூளையில் ஏதேனும் நடந்திருக்கலாம் என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

10 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் இரண்டாவது மகள் ஹேமலதா. கடந்த அக்டோபர் 11-ம் தேதி சிறுமியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், மறுநாள் அவர் திடீரென காணாமல் போனார். பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 39 நாட்கள் ஆகிட்டு..! நள்ளிரவில் அண்டை வீட்டு பெண்ணுக்கு கேட்ட அந்த சத்தம்.. அம்மா, அப்பாவுக்கு கேட்கவில்லை! ஏன்..? கதவு திறந்தது எப்படி? குடும்பத்தினர் ரகசியத்தை உடைக்கும் சிபிசிஐடி..!!!

இதையடுத்து வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். டிஎஸ்பிக்கள் கீதா, வேல்முருகன் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் பெற்றோர், பாட்டி, எதிர் வீட்டில் வசிக்கும் பெண் உள்ளிட்ட பலரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எதிர் வீட்டில் வசிக்கும் மஞ்சுளாவின் உறவினர் எனக் கூறப்படும் இளைஞரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலும் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.

செங்கல் சூளையில் சாம்பல் மாதிரிகள் சேகரிப்பு

சிறுமி காணாமல் போன நாளில், அந்தப் பகுதியில் உள்ள செங்கல் சூளை எரிந்துகொண்டிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், சிறுமியை அங்கு கொண்டு சென்று கொலை செய்திருக்கலாமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்தக் கோணத்தில் விசாரணை நடத்தும் போலீசார், செங்கல் சூளையில் இருந்த சாம்பல் உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

600 பேரின் செல்போன் அழைப்புகள் ஆய்வு

மேலும், சிறுமி காணாமல் போன நாளில் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள செல்போன் கோபுரங்களில் பதிவான அழைப்புத் தரவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சுமார் 600 பேரின் செல்போன் அழைப்புகள் தொடர்பான தகவல்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சிறுமி ஹேமலதா என்ன ஆனார் என்பது குறித்த உறுதியான தகவல் கிடைக்காத நிலையில், அவரை கண்டுபிடிக்கும் முயற்சியிலும், வழக்கில் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் பணியிலும் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதையும் படிங்க: நாளுக்கு நாள் அதிகரிக்கும் சவால்! சிசிடிவி இல்லாத சின்ன கிராமத்தில் சத்தமில்லாமல் நடந்த மர்மம்... செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் திகைத்து நிற்கும் சிபிசிஐடி..!!!