5 ஆண்டுகள் ஆகிட்டு! தேடி திரிந்தும் கிடைக்காத பெண்... நான்காம் வகுப்பு புகைப்படத்தை வைத்து AI செய்த அதிசயம்! போலீஸ் காட்டிய அதிரடி... குவியும் பாராட்டுகள்..!!!



missing-woman-found-with-ai-age-progression

உத்தரப் பிரதேசத்தில் 5 ஆண்டுகளாகக் காணாமல் போன 30 வயது பெண்ணை, சிறுவயதில் எடுக்கப்பட்ட ஒரே புகைப்படம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலீசார் ராஜஸ்தானில் கண்டுபிடித்து மீட்டுள்ளனர். 2007-ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து தற்போதைய தோற்றத்தை உருவாக்கி தேடுதல் நடத்திய காவலரின் முயற்சி பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையில் சிறப்பாகச் செயல்பட்ட காவலருக்கு போலீஸ் அதிகாரிகள் பரிசு வழங்கிக் கவுரவித்துள்ளனர்.

5 ஆண்டுகளாக காணாமல் போன மஞ்சு கர்வார்

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சு கர்வார் (30) என்பவர் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார். திருமணம் செய்து வைப்பதாகக் கூறி அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மஞ்சுவை அழைத்துச் சென்றதாக அவரது தாயார் கிஸ்மத் தேவி கடந்த ஜூலை 14-ஆம் தேதி பபானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையும் படிங்க: செத்து போய்டலாம் போல இருக்கு! ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய்...10-ஆம் வகுப்பு மாணவியிடம் ஆசை வார்த்தை பேசி அத்துமீறிய காவலர்! பகீர் சம்பவம்..!!!

இதையடுத்து போலீசார் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர். ஆனால், மஞ்சுவின் சமீபத்திய புகைப்படம் கிடைக்காததால் அவரைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

2007 புகைப்படம் மூலம் AI உதவியுடன் தேடுதல்

மஞ்சு நான்காம் வகுப்பு படித்தபோது, 2007-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சிறுவயது புகைப்படம் போலீசாரிடம் கிடைத்தது. அதனுடன் அவரது பெற்றோர் மற்றும் சகோதரியின் புகைப்படங்களையும் பயன்படுத்தி, பபானி காவலர் விஜய் பாண்டே, ChatGPT மற்றும் Google Gemini உள்ளிட்ட AI கருவிகளின் உதவியுடன் மஞ்சுவின் தற்போதைய வயதுக்கு ஏற்ற தோற்றத்தை உருவாக்கினார்.

AI மூலம் உருவாக்கப்பட்ட படத்தைப் பார்த்த குடும்பத்தினர், அது மஞ்சுவின் தோற்றத்துடன் ஒத்துப்போவதாக அடையாளம் தெரிவித்தனர். இதையடுத்து அந்தப் படத்தை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தேடுதலைத் தீவிரப்படுத்தினர்.

ராஜஸ்தானில் கணவர், குழந்தைகளுடன் மீட்பு

கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி கிடைத்த தகவலின் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் ஹமீர்வாஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மஞ்சு இருப்பது தெரியவந்தது. அங்கு கணவர் உமேந்திரா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த அவரை, தனிப்படை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.

இந்த நடவடிக்கையில் சிறப்பாகச் செயல்பட்ட காவலர் விஜய் பாண்டேவுக்கு உத்தரப் பிரதேச காவல்துறை தலைமை இயக்குநர் ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்கினார். மேலும், சோன்பத்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுச் சான்றிதழுடன் ரூ.2,100 பரிசும் வழங்கிக் கவுரவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: ஒரு நொடியில ஒரு உயிர் போச்சே! கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதிய கார்! 18 வயது இளைஞர் பரிதாப பலி... பகீர் சிசிடிவி காட்சி..!!!