செத்து போய்டலாம் போல இருக்கு! ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய்...10-ஆம் வகுப்பு மாணவியிடம் ஆசை வார்த்தை பேசி அத்துமீறிய காவலர்! பகீர் சம்பவம்..!!!



ghazipur-police-officer-sexual-assault-allegation

உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரில், 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் காவலர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், ஆபாசப் படங்களை எடுத்து மிரட்டியதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாணவி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக மாணவி புகார்

காமர் காவல் நிலையத்தில் பணியாற்றும் மோகித் யாதவ் என்ற காவலர் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதாக மாணவி தனது புகாரில் தெரிவித்துள்ளார். அங்கு ஆபாசப் படங்களை எடுத்ததாகவும், அவற்றைக் காட்டி மிரட்டியதுடன் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: கண்ணுமுண்ணு தெரியாம வரீங்களே இப்படி...! ஐயோ.. விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் மீது கார் ஏறி தூக்கி வீசப்பட்ட கொடூரம்! அதிர்ச்சி வீடியோ..!!!

தற்கொலை எண்ணம் வருவதாக வீடியோவில் வேதனை

தனது குடும்பத்தினரும் தன்னைக் கைவிட்டுவிட்டதாகக் கூறிய மாணவி, தற்போது கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக வீடியோவில் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மனமுடைந்துள்ளதாகவும் அவர் வேதனையுடன் பேசியுள்ளார். மாணவியின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

விசாரணை தீவிரம் என காவல்துறை தகவல்

இதுகுறித்து ஊரக காவல் கண்காணிப்பாளர் அதுல் குமார் சோங்கார், தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்கு உள்ளான காவலர் தப்பியோட முயற்சிப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியாகியுள்ளது . விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: கணவனின் கனவு வீட்டில் தொடங்கிய ரகசிய உறவு! பெயிண்ட் அடிக்க வந்த பெயிண்டருடன் மனைவி இருந்த அந்த கோலம்... கணவனுக்கு நேர்ந்த பயங்கரம்..! இறுதியில் அம்பலமான் அதிர்ச்சி பின்னணி..!!!