7 வயது சிறுமி மாயமான வழக்கில் தீடீர் திருப்பம்! கண்ணீருடன் கதறும் தாய்... ஜோதிடர் சொன்ன அதிர்ச்சி தகவல்...!!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. 12ஆம் தேதி அதிகாலை சிறுமி காணாமல் போன நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமியின் தாயார் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை சிறுமி குறித்த உறுதியான தகவல் கிடைக்கவில்லை.
சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட சிறுமி மாயமான வழக்கு
ஹேமலதா மாயமானதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் காவல் நிலைய போலீஸார் 8 தனிப்படைகள் அமைத்துத் தேடினர். வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதையும் படிங்க: 10 நாட்கள் ஆகிட்டு...! 7 வயது சிறுமி மாயமான வழக்கில்... செல்போன் சிக்னல் காட்டிய ரகசியம்..! போலீஸ் வேட்டையில் அதிரடி திருப்பம்..!!!
இதன் தொடர்ச்சியாக, சிபிசிஐடி எஸ்பி ஜவஹர், டிஎஸ்பி கீதா, ஆய்வாளர் ரேவதி ஆகியோர் சிறுமியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். சிறுமியின் தாயார் பவானியிடமும் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தாயிடம் தொடர் விசாரணை; குடும்பத்தினர் தவிப்பு
விசாரணை குறித்து பேசிய பவானி, குழந்தை காணாமல் போனது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும், போலீஸார் தன்னைச் சந்தேகித்து மிரட்டுவதாகவும் வேதனையுடன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இரவு குழந்தையுடன் தூங்கியதுதான் தனக்குத் தெரியும் என்றும், அதன் பிறகு என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
குழந்தையைப் பிரிந்த துயரத்தில் இருக்கும் குடும்பத்தினர், சிறுமி விரைவில் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் ஜோதிடம் பார்த்தும் வருகின்றனர். கல்லாடிக்குளத்தில் ஜோதிடம் பார்த்தபோது, சிறுமிக்கு ஆபத்து இல்லை என்றும் சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டதாக பவானி தெரிவித்துள்ளார். இவை குடும்பத்தினர் பகிர்ந்த தகவல்கள் மட்டுமே; சிறுமியின் நிலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.
கிணறுகள், நீர்நிலைகள் உள்ளிட்ட இடங்களில் தேடுதல்
சிறுமியின் தந்தைக்கு காசநோய் இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, வீட்டின் அருகிலுள்ள கிணறுகள், நீர்நிலைகள், விவசாய நிலங்கள் மற்றும் மலைப்பகுதிகளிலும் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும், சிறுமி எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிய உதவும் தடயம் இதுவரை கிடைக்கவில்லை.
சிறுமி மாயமானது திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 நாட்களைக் கடந்தும் ஹேமலதா குறித்த தகவல் கிடைக்காததால் குடும்பத்தினர் பெரும் கவலையில் உள்ளனர். சிபிசிஐடி விசாரணையில் புதிய தடயங்கள் கிடைத்து, சிறுமி பாதுகாப்பாக மீட்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ஆலம்பூண்டி கிராம மக்களிடமும் நிலவுகிறது.
இதையும் படிங்க: ஐயோ..! கடவுளே...! இரவில் பெற்றோர் நடுவே தூங்கிய 7 வயது சிறுமி..! காலையில் எழுந்தபோது படுக்கையில் காத்திருந்த பேரதிர்ச்சி.... பகீர் சம்பவம்..!!!