10 நாட்கள் ஆகிட்டு...! 7 வயது சிறுமி மாயமான வழக்கில்... செல்போன் சிக்னல் காட்டிய ரகசியம்..! போலீஸ் வேட்டையில் அதிரடி திருப்பம்..!!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் மாயமான 7 வயது சிறுமியைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. சிறுமி காணாமல் போய் 10 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே, செல்போன் கோபுர சிக்னல் ஆய்வில் சந்தேகத்திற்குரிய இரண்டு எண்கள் கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றுடன் தொடர்புடைய இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் உரையாடல்களில் போலீசாருக்கு கிடைத்த தடயம்
சிறுமி மாயமான நாளின் இரவில், குறிப்பிட்ட இரண்டு செல்போன் எண்களில் நீண்ட நேரம் உரையாடல் நடைபெற்றது விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த எண்களுடன் தொடர்புடைய இருவரையும் பிடித்த போலீசார், செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஐயோ..! கடவுளே...! இரவில் பெற்றோர் நடுவே தூங்கிய 7 வயது சிறுமி..! காலையில் எழுந்தபோது படுக்கையில் காத்திருந்த பேரதிர்ச்சி.... பகீர் சம்பவம்..!!!
இந்த உரையாடல்கள் சிறுமி மாயமான வழக்கில் முக்கியத் தடயமாக அமையுமா என்பது விசாரணையின் முடிவில்தான் தெரியவரும். இதுவரை சிறுமி இருக்கும் இடம் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
10 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல்
சிறுமி மாயமாகி 10 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரைத் தேடும் பணியை போலீசார் மேலும் விரிவுபடுத்தியுள்ளனர். இதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஆலம்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு பகலாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுமியை மீட்க பொதுமக்கள் கோரிக்கை
சிறுமி மாயமானதற்கான காரணம் என்ன, அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். புதிய தடயங்கள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இதற்கிடையே, சிறுமியை விரைவாகக் கண்டுபிடித்து மீட்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: யாரையும் தப்பவிடக் கூடாது... அதிகாரிகளுக்கு CM விஜய் போட்ட ஆர்டர்! வீரமணி வழக்கில் சிக்கிய அடுத்த நபர்... போலீஸ் அதிரடி கைது..!!!