மகனின் முதல் படத்தை பார்க்க தியேட்டருக்கு ஓடோடி வந்த சங்கீதா! கூட அவரது தங்கையும்... இணையத்தில் தீயாய் வைரலாகும் வீடியோ..!!!
ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு எதிர்பார்ப்பு காணப்பட்டது.
வடபழனி திரையரங்கில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்ற முதல் காட்சிக்கு இயக்குநர் ஜேசன் சஞ்சய் நேரில் வந்தார். அவரைக் கண்ட ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆரவாரம் செய்தும் வரவேற்றனர். தனது முதல் படம் வெளியாகும் தருணத்தில் கிடைத்த இந்த வரவேற்பு மிகுந்த நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்ததாக ஜேசன் சஞ்சய் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அம்மா வாரத்திருக்கு ஒரு முறை! ஆனால் அப்பாவுக்கு வந்துச்சு அவ்ளோதான்.... தந்தை விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் சொன்ன சுவாரஸ்யமான தகவல்..!!!
மகன் படத்தை காண திரையரங்கிற்கு வந்த சங்கீதா
ஜேசன் சஞ்சயின் முக்கியமான திரைப்பயணத் தொடக்கத்தை கொண்டாடும் வகையில் அவரது தாயார் சங்கீதா மற்றும் சகோதரி திவ்யா சாஷாவும் கமலா திரையரங்கிற்கு வந்தனர். இருவரும் ரசிகர்களுடன் அமர்ந்து ‘சிக்மா’ படத்தை பார்த்தனர்.
https://media.getlokalapp.com/videos-bucket//lokalapp-prd-1312163145/videos/17280440/17280440_ssstwitter.com_1790913737556_transcode_1227805.mp4
குடும்பம் தொடர்பாக அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவி வந்த நிலையில், மகனின் முதல் பட வெளியீட்டில் சங்கீதா நேரில் பங்கேற்றது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜேசன் சஞ்சயின் இயக்குநர் பயணம் தொடங்கியுள்ள நிலையில், அவரது முதல் படத்துக்கு திரையுலகிலும் ரசிகர்கள் தரப்பிலும் எதிர்பார்ப்பு தொடர்கிறது.