நகை வாங்க போறீங்கா..? தங்கத்துல ரீனியம் என்ற உலோகம் கலப்படம்.! முதல்ல இந்த லிஸ்ட்டை எல்லாம் கவனித்து நகை வாங்குங்க... BIS அதிரடி எச்சரிக்கை.!!,



gold-adulteration-renium-bis-warning

தங்கத்தில் ரீனியம் என்ற உலோகத்தை கலந்து கலப்படம் செய்வதாக தகவல் பரவி வரும் நிலையில், இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS) இந்த விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது. சீனாவில் இருந்து கொண்டுவரப்படும் ரீனியம் மூலம் தங்கத்தின் எடையை அதிகரிக்கலாம் என்ற தகவல் நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தங்கத்தில் எந்த வகையான கலப்படம் கண்டறியப்பட்டாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என BIS எச்சரித்துள்ளது.

ரீனியம் கலப்படம் தொடர்பான தகவலால் பரபரப்பு

கடந்த சில நாட்களாக தங்கத்தில் ரீனியம் என்ற உலோகத்தை கலந்து கலப்படம் செய்வதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதிக அடர்த்தி கொண்ட இந்த உலோகத்தை தங்கத்தில் சேர்ப்பதன் மூலம், தங்கத்தின் தூய்மைக்கு ஏற்ற அளவில் இல்லாமல் எடையை அதிகரிக்க முடியும் என சில தரப்புகளில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: அழகுனால் அழிந்து போன பெண்! தாழ்வு மனப்பான்மையால் எடுத்த அதிர்ச்சி முடிவு! 5 முறை நின்ற இதயத் துடிப்பு... பரிதாபமாக பறிபோன 5 குழந்தையோட தாயின் உயிர்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்...!!!

இதனால், 22 கேரட் தங்கம் என வாங்கும் நகைகளில் உண்மையான தங்கத்தின் அளவு குறைவாக இருக்குமோ என்ற சந்தேகம் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும், ரீனியத்தை தங்கத்துடன் கலப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமா என்பது குறித்து நிபுணர்களிடையே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

இந்த விவகாரம் நகை வர்த்தக அமைப்புகள் மூலம் இந்திய தர நிர்ணய ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ரீனியம் உள்ளிட்ட கலப்படப் பொருட்களை தயாரிப்பவர்கள், விநியோகிப்பவர்கள் அல்லது பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என BIS உறுதியளித்துள்ளது.

மேலும், இத்தகைய கலப்படங்களை கண்டறிய தேவையான சோதனை கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஹால்மார்க்கிங் மையங்களில் இருப்பதாகவும் நகை வர்த்தக அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக முறையான புகார் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நகை வாங்கும்போது ஹால்மார்க் விவரங்களை சரிபார்க்க அறிவுரை

பொதுமக்கள் நம்பகமான நகைக்கடைகளில் தங்கம் வாங்குவதுடன், முறையான ரசீது அல்லது GST இன்வாய்ஸையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹால்மார்க் முத்திரை மற்றும் அதன் தனித்துவ அடையாள எண்ணை BIS Care செயலி மூலம் சரிபார்ப்பதும் அவசியம்.

நகை வியாபாரிகளும் தங்களது சப்ளையர்களிடமிருந்து பெறப்படும் தங்கத்தின் தரத்தை உறுதிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தங்கத்தில் கலப்படம் தொடர்பான தகவல்கள் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் தேவையற்ற அச்சமின்றி விழிப்புணர்வுடன் நகைகளை வாங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: இரவு நேரத்தில் குடியிருப்பாளர்களை குறிவைத்து தாக்கும் ஆந்தை..! பின்னணி என்ன? திகில் சம்பவம்..!!!