அழகுனால் அழிந்து போன பெண்! தாழ்வு மனப்பான்மையால் எடுத்த அதிர்ச்சி முடிவு! 5 முறை நின்ற இதயத் துடிப்பு... பரிதாபமாக பறிபோன 5 குழந்தையோட தாயின் உயிர்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்...!!!
பிரிட்டனில் அழகுக்கலை சிகிச்சை மேற்கொண்ட 33 வயதான ஐந்து குழந்தைகளின் தாய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளோசெஸ்டர் நகரைச் சேர்ந்த அலிஸ் வெப், 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரேசிலியன் பட் லிஃப்ட் எனப்படும் அழகுக்கலை சிகிச்சை செய்துகொண்டபோது, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக நிரப்புப் பொருள் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கடுமையான உடல்நல பாதிப்புக்கு ஆளான அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உயிரிழந்தார்.
7 மடங்கு அதிகமாக செலுத்தப்பட்ட நிரப்புப் பொருள்
அலிஸ் வெப், 'லிப் கிங்' என அழைக்கப்படும் ஜோர்டன் பார்க் என்பவரிடம் பின்புற அழகுபடுத்தும் சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். அப்போது பரிந்துரைக்கப்பட்ட அளவை விட ஏழு மடங்கு அதிகமாக ஹையலூரோனிக் அமிலம் செலுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சிகிச்சைக்குப் பிறகு அலிஸின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து முறை அவரது இதயத் துடிப்பு நின்றதாகவும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: இரவு நேரத்தில் குடியிருப்பாளர்களை குறிவைத்து தாக்கும் ஆந்தை..! பின்னணி என்ன? திகில் சம்பவம்..!!!
முக்கிய உறுப்புகளில் ஏற்பட்ட அடைப்பே மரணத்துக்கு காரணம்
பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கையில், அலிஸின் உடலில் செலுத்தப்பட்ட ஹையலூரோனிக் அமிலம் ரத்த ஓட்டத்தில் கலந்து முக்கிய உறுப்புகளில் அடைப்பை ஏற்படுத்தியதே உயிரிழப்புக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளை, இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இத்தகைய சிகிச்சைகளை மேற்கொள்ள ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்த ஜோர்டன் பார்க், மற்றொருவரின் அழகு நிலையத்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளித்ததாக விசாரணையில் தெரியவந்தது. கடுமையான அலட்சியத்தால் மரணம் விளைவித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஜோர்டன் பார்க் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உயிரிழந்துவிட்டதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாழ்வு மனப்பான்மையால் அழகுக்கலை சிகிச்சையை நாடியதாக குடும்பத்தினர் வேதனை
அலிஸ் தனது புறத்தோற்றம் குறித்து ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையாலும், மேலும் அழகாக மாற வேண்டும் என்ற எண்ணத்தாலும் இத்தகைய சிகிச்சைகளை நாடியதாக அவரது சகோதரி ஏப்ரல் பால்மர் தெரிவித்துள்ளார். இயற்கையாகவே அழகாக இருந்த அலிஸ், தனது குழந்தைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர் என்றும், தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமே அவருக்கு இல்லை என்றும் குடும்பத்தினர் வேதனையுடன் கூறியுள்ளனர்.
முறையான மருத்துவத் தகுதி, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் உரிய கண்காணிப்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் அழகுக்கலை சிகிச்சைகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதை அலிஸ் வெப்பின் மரணம் மீண்டும் உணர்த்தியுள்ளது.