அம்மா வாரத்திருக்கு ஒரு முறை! ஆனால் அப்பாவுக்கு வந்துச்சு அவ்ளோதான்.... தந்தை விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் சொன்ன சுவாரஸ்யமான தகவல்..!!!



jason-sanjay-talks-about-parents-vijay-anger

நடிகர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது பெற்றோர் குறித்து சமீபத்திய பேட்டியில் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக, தனது அப்பா கோபப்படும் விதம் குறித்து அவர் பேசிய கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

அம்மா அடிக்கடி திட்டுவார்; அப்பா கோபப்படுவது அரிது

பேட்டியில் தனது பெற்றோரைப் பற்றி பேசிய ஜேசன் சஞ்சய், “எனது அம்மா வாரத்திற்கு ஒருமுறை என்னை திட்டிவிடுவார். ஆனால் அப்பா மாதத்திற்கு ஒருமுறை தான் கோபப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அப்பாவிடம் அந்த விஷயம் எனக்கு ரொம்ப பிடிக்கும்! வாய்ப்பு கிடைத்தால் அதை வெளியில் கொண்டு வருவேன்... முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்..!!!

மேலும், விஜய்க்கு கோபம் வந்தால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதையும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். “அப்படி அவருக்கு கோபம் வந்துவிட்டால் அவ்வளவு தான். இருந்தாலும், ஒரு தந்தையாக அவர் வெளிப்படுத்தும் அந்த கோபத்தை நான் முழுமையாக மதிக்கிறேன்” என்று ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

நாளை வெளியாகும் ‘சிக்மா’

இதற்கிடையே, ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குநராக தனது பயணத்தை தொடங்கியுள்ள அவர், படத்தின் வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில், பெற்றோர் குறித்த இந்த பேட்டி இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

 

இதையும் படிங்க: கடைசி வரை கூடவே இருப்பியா சித்தப்பு? ஜேசன் சஞ்சய் கேட்ட கேள்வி... சிக்மா இசை வெளியீட்டு விழாவில் ஓப்பனாக பேசிய சஞ்சீவ்..!!!