கடைசி வரை கூடவே இருப்பியா சித்தப்பு? ஜேசன் சஞ்சய் கேட்ட கேள்வி... சிக்மா இசை வெளியீட்டு விழாவில் ஓப்பனாக பேசிய சஞ்சீவ்..!!!
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர் சூரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது ஜேசன் சஞ்சய் குறித்து அவர் பேசிய கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
ஜேசன் சஞ்சய்க்கு சூரி வைத்த கோரிக்கை
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி, ஜேசன் சஞ்சய் தனது தந்தை விஜய்யைப் போலவே இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், அவர் விரைவில் கதாநாயகனாகவும் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். சூரியின் இந்த பேச்சுக்கு அரங்கில் இருந்த ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு தெரிவித்தனர்.
அம்மா, அப்பாவுக்கு நன்றி தெரிவித்த சஞ்சய்
விழாவில் பேசிய ஜேசன் சஞ்சய், தனது அம்மா மற்றும் அப்பாவுக்கு நன்றி தெரிவித்தார். படிப்பை முடித்த பிறகு இயக்குநராக வேண்டும் என்ற தனது விருப்பத்தை நிறைவேற்ற குடும்பத்தினர் அளித்த ஆதரவையும் அவர் நினைவுகூர்ந்தார்.
“கடைசி வரை கூடவே இருப்பியா சித்தப்பு?”
இதையடுத்து மேடையேறிய ஜேசன் சஞ்சய்யின் சித்தப்பாவும், ‘சிக்மா’ படத்தின் இணை இயக்குநருமான சஞ்சீவ், படம் உருவான பின்னணி குறித்து பேசினார். சஞ்சய் இயக்குநராக வேண்டும் என்று விரும்பியபோது, அவரது அம்மா சங்கீதாதான் தன்னை அழைத்துப் பேசச் சொன்னதாக அவர் தெரிவித்தார்.
மேலும், சஞ்சய் தன்னிடம் “என் கூடவே கடைசி வரை இருப்பியா சித்தப்பு?” என்று கேட்டதாகவும் சஞ்சீவ் கூறினார். அந்த வார்த்தைகளுக்காகவே சஞ்சய்க்கு தொடர்ந்து துணையாக இருப்பதாக அவர் தெரிவித்தார். சஞ்சீவின் இந்த பேச்சு அரங்கில் இருந்த ரசிகர்களை நெகிழச் செய்தது.
தந்தை விஜய்யின் திரையுலக பின்னணியைத் தாண்டி, இயக்குநராக தனது முதல் படத்தை உருவாக்கியுள்ள ஜேசன் சஞ்சய்யின் சிக்மா திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.