கண்களை பார்த்து பேசமாட்டாங்க... அதை பார்ப்பதிலே ஆர்வம் காட்டுவாங்க! காசுக்காக உடம்பை விக்கிறது எவ்வளவு பெரிய வேதனை தெரியுமா..? நடிகை சரண்யா நாக் ஆதங்கம்..!!!



actress-saranya-nag-emotional-interview

காதல், பேராண்மை உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்ற நடிகை சரண்யா நாக், தனது உடல் எடையை வெகுவாகக் குறைத்த நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் பல்வேறு வேதனையான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். தனியாக வசித்து வரும் தனக்கு ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து கிடைத்த அனுபவங்கள் குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். குறிப்பாக, தன்னை அணுகும் சில ஆண்களின் பார்வை குறித்து அவர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

‘கண்களைப் பார்த்துப் பேசுவதில்லை’ – சரண்யா நாக் ஆதங்கம்

தனியாக வசிப்பதால் ஆண்கள் தன்னிடம் நடந்துகொள்ளும் விதம் மிகவும் மோசமாக இருப்பதாக சரண்யா நாக் தெரிவித்துள்ளார். தன்னுடன் பேசும்போது கண்களைப் பார்ப்பதைவிட, உடலின் மற்ற பகுதிகளைப் பார்ப்பதிலேயே சிலர் ஆர்வம் காட்டுவதாக அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: BREAKING: பழம்பெறும் நடிகை செளகார் ஜானகி கவலைக்கிடம்... மருத்துவமனையின் அதிர்ச்சி அறிக்கை..!!!

தன்னை ஒரு பெண்ணாகவும், ஒரு மனிதராகவும் பார்க்காமல் உடலை மட்டுமே கவனிக்கும் அணுகுமுறை தனக்கு கோபத்தையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனியாக வாழும் பெண்களை சமூகம் எப்படி பார்க்கிறது என்பதையும் தனது அனுபவத்தின் மூலம் அவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

பெண்களிடம் பொறாமை அதிகம் என குற்றச்சாட்டு

ஆண்களைப் பற்றி மட்டுமல்லாமல், பெண்களிடையே நிலவும் அணுகுமுறைகள் குறித்தும் சரண்யா நாக் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண் உதவுவதற்குப் பதிலாக, அவரை அசிங்கப்படுத்தவும் அழிக்கவும் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பெண்களிடம் மற்ற பெண்களுக்கான ஆதரவு மற்றும் கரிசனை குறைவாக இருப்பதாகவும், பொறாமை அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆண்களிடம் கூட சில நேரங்களில் ஓரளவு கரிசனையை பார்க்க முடிகிறது; ஆனால் பெண்களிடம் அதுவும் கிடைப்பதில்லை என்பது தனது கசப்பான அனுபவம் என்றும் சரண்யா கூறியுள்ளார்.

வறுமையில் சிக்கிய பெண்களை குறை கூற வேண்டாம்

வறுமை மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளால் பணத்துக்காக உடலை விற்கும் பெண்களை தான் ஒருபோதும் குறை கூறுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். முகம் தெரியாத ஒருவரிடம் தங்களது உடலை விற்க வேண்டிய நிலை எவ்வளவு வேதனையானது என்பதை தான் புரிந்துகொள்வதாகவும் சரண்யா குறிப்பிட்டுள்ளார்.

அந்த நிலைக்கு பெண்களை தள்ளும் ஏழ்மையையும், அவர்களின் சூழ்நிலையையும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை; ஆனால் அவர்களை குறை கூறாமல் இருப்பதே முக்கியம் என சரண்யா நாக் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார். அவரது இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

 

இதையும் படிங்க: “இந்த கிரகத்தை விட்டே வெளியேறணும்!” கிருத்திகா உதயநிதியின் திடீர் பதிவு… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!