அதிர்ச்சி அப்டேட்..! 1963 முதல் 2017 வரை... தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் நடந்த அந்த 4 பெரிய சம்பவங்கள்! ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி கொடுக்க வெளியான ரகசிய ரிப்போர்ட்...!!!



tamil-nadu-bypolls-opposition-historic-wins

தமிழக அரசியலில் இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்கே சாதகம் என்ற பேச்சு நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், தேர்தல் வரலாறு அதற்கு மாறான பல முடிவுகளையும் பதிவு செய்துள்ளது. ஆளுங்கட்சியின் அதிகார பலத்தையும் மீறி எதிர்க்கட்சிகளும் சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ள சம்பவங்கள் அதற்கு சாட்சியாக உள்ளன. அந்த வரிசையில் தற்போது நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களும் கவனம் பெற்றுள்ளன.

1963-ல் காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக

1963-ஆம் ஆண்டு நடைபெற்ற திருவண்ணாமலை இடைத்தேர்தல், தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலையில், திமுக சார்பில் போட்டியிட்ட பி.யு. சண்முகம் வெற்றி பெற்றார். ஆளுங்கட்சியின் நிர்வாக பலத்துக்கு மத்தியில் எதிர்க்கட்சி பெற்ற இந்த வெற்றி, அன்றைய அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: இடைத்தேர்தலில் இரு துருவ அரசியல் இல்ல..! 5 முனை போட்டியால் அக்.6-ல் காத்திருக்கும் பேரதிர்ச்சி...! வாக்கு பிரிவினை யாருக்கு சாதகம்? பரபரக்கும் அரசியல்..!!!

அதன்பின் 1974-ல் கோயம்புத்தூர் மேற்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை எதிர்த்து, எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுக களமிறங்கியது. தேர்தல் முடிவில் அதிமுக வெற்றி பெற்றதுடன், திமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. புதிதாக உருவான கட்சிக்கு கிடைத்த இந்த வெற்றி, தமிழக அரசியலில் அதன் வளர்ச்சிக்கு முக்கிய அடையாளமாக அமைந்தது.

நத்தம் முதல் ஆர்.கே. நகர் வரை மாறிய தேர்தல் கணக்கு

1999-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற நத்தம் மற்றும் திருவட்டார் இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக முடிவு அமையவில்லை. நத்தத்தில் அதிமுகவும், திருவட்டாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றன. இதனால், இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்கு வெற்றி என்ற கருத்து மீண்டும் கேள்விக்குள்ளானது.

இதன் தொடர்ச்சியாக 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தமிழக அரசியலில் தனி இடம் பிடித்தது. ஆளுங்கட்சியான அதிமுக தனது முழு தேர்தல் இயந்திரத்துடன் களமிறங்கியபோதும், சுயேச்சையாக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு, ஆளுங்கட்சியின் வாக்கு வங்கியை எதிர்பாராத வகையில் சுயேச்சை வேட்பாளரும் சவால் செய்ய முடியும் என்பதை காட்டியது.

மதுராந்தகம், தாராபுரத்தில் மீண்டும் திரும்புமா பழைய வரலாறு?

தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களை அரசியல் கட்சிகள் எதிர்கொள்ளும் நிலையில், கடந்த கால முடிவுகள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. கூட்டணிக் கட்சிகளின் தனித்துப் போட்டி, எதிர்க்கட்சிகளின் தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவை ஆளுங்கட்சிக்கு கூடுதல் சவாலாக அமையக்கூடும்.

தேர்தல் களத்தில் அதிகார பலம் மட்டுமே வெற்றியை உறுதி செய்யாது என்பதை தமிழகத்தின் கடந்த கால இடைத்தேர்தல்கள் உணர்த்துகின்றன. எனவே, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வாக்காளர்களின் மனநிலை எந்தப் பக்கம் திரும்புகிறது என்பதே இறுதியில் முக்கியமாக அமையும். இடைத்தேர்தல் வரலாறு மீண்டும் ஒரு எதிர்பாராத அரசியல் திருப்பத்தை பதிவு செய்யுமா என்பதற்கு முடிவுகள்தான் பதில் சொல்லும்.

 

இதையும் படிங்க: தவெக - வை தடுக்க திமுக, அதிமுக போடும் திட்டம்! ஆனால் முதல்வர் விஜய் போடும் டபுள் கால்குலேஷன்... அதிகாரிகளுக்கு பரந்த ஆர்டர்! இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி ...!!!