இடைத்தேர்தலில் இரு துருவ அரசியல் இல்ல..! 5 முனை போட்டியால் அக்.6-ல் காத்திருக்கும் பேரதிர்ச்சி...! வாக்கு பிரிவினை யாருக்கு சாதகம்? பரபரக்கும் அரசியல்..!!!
தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பமாக, வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 5 முனைப் போட்டியாக மாறியுள்ளது. ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி என முக்கிய கட்சிகள் களமிறங்கியுள்ள நிலையில், இடதுசாரி கட்சிகளும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இதனால் இருதுருவ அரசியல் என்ற நிலை மாறி, தேர்தல் களம் பல முனைகளாகப் பிரிந்துள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முரண்பாடே இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் பாரம்பரியமாக அந்தக் கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்குகள் தனியாகப் பிரியும் சூழல் உருவாகியுள்ளது. அதே நேரத்தில், ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கான வாக்குகளை ஒருங்கிணைக்க தீவிர களப்பணியில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீங்க என்ன சொல்றது... கம்யூனிஸ்ட்டுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த முதல்வர் விஜய்! எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!
வாக்குப் பிரிவினை யாருக்கு சாதகம்?
இடைத்தேர்தல் என்பதால் ஆளுங்கட்சிக்கு இயல்பாகவே சாதகமான சூழல் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகளின் அடிமட்ட தேர்தல் பணியும் வாக்குகளை எந்த அளவுக்கு ஒருங்கிணைக்கின்றன என்பதும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இடதுசாரிகள் தனியாகப் பெறும் வாக்குகள் முடிவில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இதனிடையே, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களை எந்த அளவுக்கு ஈர்க்கின்றன என்பதும் கவனிக்க வேண்டிய அம்சமாக உள்ளது. மறுபுறம் திமுக, அதிமுகவின் வலுவான உள்ளூர் அமைப்புகள் தேர்தல் களத்தில் அவர்களுக்கு கூடுதல் பலமாக அமையலாம். வாக்குப் பிரிவினை அதிகரிக்கும் நிலையில், சில ஆயிரம் வாக்குகள் கூட வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வாய்ப்பு உள்ளது.
அரசியல் கூட்டணிகளுக்கு முக்கிய சோதனை
இதனால் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் தேர்தல் முடிவு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை உறுதியாக கணிப்பது கடினமாகவே உள்ளது. ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர் தேர்வு, பிரசாரம் மற்றும் தொகுதி அளவிலான வாக்கு ஒருங்கிணைப்பு ஆகியவை முடிவில் முக்கிய பங்கு வகிக்க உள்ளன.
இரண்டு தொகுதிகளுக்கான தேர்தலாக மட்டுமின்றி, தமிழகத்தில் அடுத்தகட்ட அரசியல் கூட்டணி கணக்குகளுக்கும் இந்தப் போட்டி ஒரு சோதனையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக 5 முனைப் போட்டி எந்தக் கட்சிக்கு சாதகமாக மாறுகிறது என்பதே தேர்தல் முடிவில் முக்கிய கேள்வியாக இருக்கும்.