சிவகார்த்திகேயன் - சீமான் புதிய கூட்டணி.. வெளியான அதிரடி அறிவிப்பு!



Seeman in seyon movie

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘சேயோன்’ படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், படத்தில் சீமான் இணைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது.

தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சீமான், ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நடிகர் ராஜ்கிரணுக்கு ஏற்பட்ட நிலைமை… முன்ஜாமின் மனுவால் பரபரப்பு!

Seyon

‘சேயோன்’ படத்தில் சீமான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் குறித்த கூடுதல் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அவரது கதாபாத்திரம் மற்றும் படத்தில் அவரது பங்களிப்பு குறித்து படக்குழு அடுத்தடுத்த அறிவிப்புகளில் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் - சீமான் கூட்டணி முதன்முறையாக திரையில் இணைவதால், ‘சேயோன்’ திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: நெருக்கமான காட்சிகளா? ரவி மோகன் – கெனிஷா வீடியோ வைரல்!