நடிகர் ராஜ்கிரணுக்கு ஏற்பட்ட நிலைமை… முன்ஜாமின் மனுவால் பரபரப்பு!



Rajkiran bail appeal in highcourt

திரைப்படம் தயாரிப்பதற்காக பெற்ற முன்பணத்தில் மீதமுள்ள ரூ.40 லட்சத்தை திருப்பி அளிக்காதது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நடிகர் ராஜ்கிரண் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை மீஞ்சூரைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் சரவணன் என்பவர், கடந்த 2022-ம் ஆண்டு திரைப்படம் தயாரிப்பதற்காக நடிகர் ராஜ்கிரணுக்கு ரூ.50 லட்சம் முன்பணமாக வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், திரைப்படத்தின் பணிகள் தொடங்காத நிலையில், அந்த தொகையை திருப்பி வழங்குமாறு தயாரிப்பாளர் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அதன் அடிப்படையில் ராஜ்கிரண் கடந்த 2025-ம் ஆண்டு ரூ.10 லட்சத்தை திருப்பி வழங்கியதாகவும் கூறப்படுகிறது. மீதமுள்ள ரூ.40 லட்சம் வழங்கப்படவில்லை எனக் கூறி தயாரிப்பாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சூர்யாவுக்கு ஜோடியாகும் ‘டிசி’ பட நாயகி.. ஹெச்.வினோத் படத்தில் இணைந்த புதிய கூட்டணி!

அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யக்கோரி பொன்னேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி ராஜ்கிரண் மீது மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, கைது நடவடிக்கையை தவிர்க்க ராஜ்கிரண் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில், திரைப்படம் தொடர்பான ஒப்பந்த விவகாரம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவியல் வழக்காக மாற்றப்பட்டுள்ளதாகவும், இது அடிப்படையில் சிவில் பிரச்சினை என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தான் எங்கும் தப்பிச் செல்லப் போவதில்லை என்றும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாகவும் ராஜ்கிரண் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

இதையும் படிங்க: ஒரு நைட்டுக்கு எவ்ளோ? வெளிநாடு போலாமா? கலங்கடிக்கும் ஆபாச தொல்லை.. பதறும் நடிகை..!