அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. திரையரங்குகளில் ‘GLADIATORS’ ட்ரெய்லர்!



 Ajith Kumar gladiator trailer release on sep 6

நடிகர் அஜித்குமாரின் கார் ரேசிங் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘GLADIATORS’ ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரசிகர்களுக்காகவே பிரத்யேகமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் ட்ரெய்லரை திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், திரைப்படங்களுக்கு அப்பாற்பட்டு கார் பந்தயத்திலும் தொடர்ந்து தனது ஆர்வத்தையும் திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் அவர் பங்கேற்று வரும் நிலையில், அவரது ரேசிங் பயணத்தை பதிவு செய்யும் வகையில் ‘GLADIATORS’ என்ற ஆவணப்படம் உருவாகியுள்ளது.

இந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். அஜித்குமாரின் ரேசிங் உலகம், போட்டிகளின் பின்னணியில் அவர் எதிர்கொண்ட சவால்கள், வெற்றிக்கான அவரது போராட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த ஆவணப்படத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு.. அஜித் குமார் பாராட்டு!

இந்நிலையில், ‘GLADIATORS’ ஆவணப்படத்தின் ட்ரெய்லர் செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இதனை ரசிகர்கள் திரையரங்குகளில் நேரடியாகக் காணும் வகையில் சிறப்புத் திரையிடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் இந்த ட்ரெய்லர் திரையிடப்பட உள்ளது. 

Ajith Kumar

குறிப்பாக, அஜித் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த திரையிடல், வழக்கமான ஆன்லைன் ட்ரெய்லர் வெளியீட்டிலிருந்து மாறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. அஜித்தின் திரைப்படங்களைப் போலவே அவரது ரேசிங் பயணத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. 

சர்வதேச கார் பந்தயங்களில் அஜித் பங்கேற்கும் ஒவ்வொரு முறையும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அவரது ரேசிங் பயணத்தை மையமாகக் கொண்டுள்ள ‘GLADIATORS’ ஆவணப்படத்தின் மீதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு.. அஜித் குமார் பாராட்டு!