முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு.. அஜித் குமார் பாராட்டு!



Ajith Kumar appreciate Vijay

தமிழ்நாட்டில் மோட்டார்ஸ்போர்ட்ஸ் மற்றும் இளைஞர்களை மையமாகக் கொண்ட விளையாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையை வளர்க்கும் வகையில், சென்னையில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இளைஞர்களிடையே மோட்டார் பந்தயத்தின் மீதான ஆர்வத்தை ஊக்குவிப்பதும், திறமையான பந்தய வீரர்களை உருவாக்குவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக சர்வதேச தரத்திலான மோட்டார்ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்புகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

Ajith Kumar

இந்த நிலையில் தமிழக அரசை நடிகர் அஜித் குமார் பாராட்டி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் சர்வதேச அளவிலான மோட்டார் பந்தய போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதன் மூலம் விளையாட்டுத் துறையையும், விளையாட்டுச் சுற்றுலாவையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இளைஞர்களை விளையாட்டுத் துறையில் ஊக்குவிப்பதற்கும், குறிப்பாக மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையின் வளர்ச்சிக்கும் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இன்னைக்கே உடனடியாக விசாரிங்க...! எனக்கு ஒரு முடிவு தெரியனும்! சங்கீதா காட்டிய காட்டம்.... செங்கல்பட்டு கோர்ட்டில் பரபரப்பு..!!!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “One Small step by the Tamilnadu Government, one giant leap for Indian motorsports” என குறிப்பிட்டுள்ளார். அதாவது, தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் ஒரு சிறிய முன்னெடுப்பு கூட, இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறைக்கு மிகப்பெரிய முன்னேற்றமாக அமையும் என்ற கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

Ajith Kumar

திரைத்துறையில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கு இடையே ரசிகர்கள் மத்தியில் நீண்டகாலமாக மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், அஜித் குமார் தெரிவித்துள்ள இந்த பாராட்டு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: சூர்யாவுக்கு ஜோடியாகும் ‘டிசி’ பட நாயகி.. ஹெச்.வினோத் படத்தில் இணைந்த புதிய கூட்டணி!