அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. திரையரங்குகளில் ‘GLADIATORS’ ட்ரெய்லர்!
“எங்களுக்கு நடந்த கொடுமை இதுதான்”.. பெற்றோரிடம் கதறிய 4 மாணவிகள்; பள்ளியில் பரபரப்பு!
திருச்சி அருகே தனியார் பள்ளியில், தலைமை ஆசிரியர் நான்கு மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இயங்கி வரும் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக 55 வயதான ஜெயராஜ் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், பள்ளியில் படித்து வரும் 4 மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் தொடர்ந்து பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்த மாணவிகள், தங்களுக்கு நேர்ந்த சம்பவங்களை பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆண் குழந்தையை பிரசவித்த 10ம் வகுப்பு மாணவி.. விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.. திருச்சியில் பேரதிர்ச்சி.!
இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனால், பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், பள்ளி வளாகத்தில் பரபரப்பான சூழல் உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார், மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டதுடன், பள்ளி நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணை நடத்தித் தலைமை ஆசிரியரின் குற்றச்செயலை உறுதி செய்தனர். இதனையடுத்து தலைமை ஆசிரியர் ஜெயராஜைக் கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆம்னி பேருந்து - கார் மோதி பயங்கர விபத்து.. 3 பேர் பரிதாப பலி.!