ஆண் குழந்தையை பிரசவித்த 10ம் வகுப்பு மாணவி.. விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.. திருச்சியில் பேரதிர்ச்சி.!
காதல் பெயரில் 15 வயது சிறுமியை இளைஞர் வன்கொடுமை செய்ததால், சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.
மாணவி:
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவர், திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகிறார். இவர் 10ம் வகுப்பு பயில்கிறார். பள்ளியின் விடுதியில் தங்கியிருந்து தினமும் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.
இதையும் படிங்க: Sivagangai News: 23 வயது இளைஞரை ஓடஓட விரட்டி கொடூரமாக கொன்ற கும்பல்.. கண்ணீரில் உறவினர்கள்.!
பிரசவம்:
இதனிடையே, விடுதியில் இருந்த மாணவிக்கு கடந்த திங்கள்கிழமை மாலை நேரத்தில் திடீரென வயிற்று வலி ஏற்பட்டு பிரசவம் நடந்துள்ளது. பள்ளி விடுதி வளாகத்திலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தகவல் அறிந்த பள்ளி நிர்வாகத்தினர் மாணவியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.

விசாரணை:
இதுதொடர்பாக தகவல் அறிந்து காவல்துறையினர், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை செய்தனர். அப்போது, கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த இளைஞரை சிறுமி காதலித்து வந்த நிலையில், அதனால் கர்ப்பமானது தெரியவந்துள்ளது. இதனால் இளைஞருக்கு வலைவீசப்பட்டுள்ளது. விசாரணை தொடருகிறது.
இதையும் படிங்க: காதலனின் கடனை அடைக்க கொள்ளைக்காரியாக மாறிய சிந்து.. கோவையில் நடந்த திடுக் சம்பவம்..!