Sivagangai News: 23 வயது இளைஞரை ஓடஓட விரட்டி கொடூரமாக கொன்ற கும்பல்.. கண்ணீரில் உறவினர்கள்.!
முன்விரோதத்தில் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம் சிவகங்கை மாவட்டத்தை அதிரவைத்துள்ளது.
பொங்கல் விழா:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் வசித்து வருபவர் கண்ணன். இவர் ஜே.சி.பி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இன்று இவரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று, சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. விசாரணையில், கடந்த 2023 ம் ஆண்டில் இலந்தைகுளம் கிராமத்தில் பொங்கல் நடைபெற்றது. அப்போது நடந்த பிரச்சனையில் கருப்பசாமி என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: காதலனின் கடனை அடைக்க கொள்ளைக்காரியாக மாறிய சிந்து.. கோவையில் நடந்த திடுக் சம்பவம்..!
குற்றவாளி:
இந்த கொலை வழக்கில் ஐந்தாவது குற்றவாளியான கண்ணன், பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. கண்ணன் இன்று காலை இலந்தைகுளம் கிராமத்தில் இருந்து வழக்கம்போல வேலைக்கு புறப்பட்டு வந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல் கொடூர செயலை அரங்கேற்றி இருக்கிறது.
வாகனத்தில் மோதி..
கண்ணனை இருசக்கர வாகனத்தில் 5 பேராக பின்தொடர்ந்த கும்பல், வேண்டும் என்றே அவரின் இருசக்கர வாகனத்தில் மோதி கீழே தள்ளி கொலை செய்துள்ளது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் நேரில் வந்து கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "வேலை வாங்கித்தரேன்" 30 பெண்களுடன் உல்லாசம்.. செல்போனில் வீடியோ.. இளைஞரின் திடுக்கிடவைக்கும் செயல்.!