நகையால் வந்த வினை.. காவலரின் உச்சிக்கு ஏறிய ஆத்திரம்.. ரத்த வெள்ளத்தில் துள்ளத்துடிக்க பலியான பெண்.!



Thoothukudi News: Police Constable Arrested for Woman’s Murder After Dispute Over Pledged Gold Jewelry

நகை அடமானம் வைத்த விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது. 

பழக்கம்: 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் பிரியா. இவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரின் சகோதரி முத்துலட்சுமி. இவர் அவ்வப்போது கடைக்கு வந்து சகோதரிக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். அப்போது, கடைக்கு வந்து சென்ற காவலர் முத்துக்குமார் என்பவருக்கும் - முத்துலெட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: காதலனின் கடனை அடைக்க கொள்ளைக்காரியாக மாறிய சிந்து.. கோவையில் நடந்த திடுக் சம்பவம்..! 

காவலர்: 

முத்துக்குமார் தட்டார்மடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இதனிடையே, பழக்கத்தின் பேரில் அவசர தேவைக்காக முத்துலட்சுமியின் நகையை வாங்கியவர் அடமானம் வைத்துள்ளார். இந்த நகையை திரும்பி தருமாறு முத்துகுமாரிடம் கேட்க, அவர் காலதாமதம் செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக இருதரப்பு பிரச்சனை நிலவி வந்துள்ளது. 

Crime news

வாக்குவாதம்: 

இதனிடையே, நேற்று இரவில் பிரியாவின் கடைக்கு வந்த முத்துக்குமார் - பிரியா இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார், அங்கிருந்த இரும்பு கம்பியால் அடித்து இருக்கிறார். மேலும், அரிவாளால் பிரியாவை கொடூரமாக வெட்டிக்கொலை செய்தார். 

விசாரணை: 

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் துறையினர், நேரில் வந்து பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான காவலர் முத்துக்குமாருக்கு வலைவீசப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: "வேலை வாங்கித்தரேன்" 30 பெண்களுடன் உல்லாசம்.. செல்போனில் வீடியோ.. இளைஞரின் திடுக்கிடவைக்கும் செயல்.!