காதலனின் கடனை அடைக்க கொள்ளைக்காரியாக மாறிய சிந்து.. கோவையில் நடந்த திடுக் சம்பவம்..! 



College Student Turns Robber to Repay Boyfriend’s Debt: Jewelry Robbery Shocks Coimbatore

மூதாட்டியின் 4 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவி மற்றும் அவரின் காதலர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நகை திருட்டு: 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர், வெள்ளலூர் பகுதியில் வசித்து வருபவர் சரஸ்வதி (வயது 70). இவர் கடந்த 30ம் தேதி தனது வீட்டு வாசல் முன் நின்று உறவினர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அச்சமயம் இளைஞர் ஒருவர் மாஸ்க்குடன் வந்தார். அவர் சரஸ்வதியின் கழுத்தில் இருந்த 4 சவரன் நகையை திடீரென பறித்துச் சென்றார். 

இதையும் படிங்க: "நான் சரி செய்கிறேன்" - திருமண தடையை நீக்குவதாக ஜோதிடரின் அதிர்ச்சி செயல்.. பெண் பரபரப்பு புகார்.! 

இளம்பெண்: 

திருட்டு சம்பவம் நடந்ததும் தயாராக காத்திருந்த இளம்பெண் ஒருவரின் ஸ்கூட்டியில் ஏறி தப்பிச்சென்றுள்ளார். இதுதொடர்பாக போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. அங்கிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தபோது, ஸ்கூட்டியின் பதிவெண் சிக்கியது. 

Coimbatore

கல்லூரி மாணவர்கள்: 

விசாரணையில், திருப்பூரைச் சேர்ந்த பரணீதரன் (வயது 21), அவரின் காதலியான நெல்லையைச் சேர்ந்த சிந்து (வயது 21) ஆகியோர் குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவரால் இருவரிடமும் இருந்து நகையை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்களை கைது செய்தனர். 

கடனை அடைக்க.. 

இதுதொடர்பான காரணம் குறித்து விசாரித்தபோது, பரணீதரன் நண்பர்களிடம் கடன்வாங்கி இருக்கிறார். அதனை அடைத்துவிட்டு, சொகுசு கார் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ பெண்களிடம் நகை பறிக்க திட்டமிட்டுள்ளார். இவர்களின் திட்டப்படி சம்பவத்தன்று திருட்டு செயலில் ஈடுபட்டு பின் சிக்கிக்கொண்டது தெரியவந்தது. 

இதையும் படிங்க: கோவை மூதாட்டி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. 17 வயது சிறுவன் பரபரப்பு வாக்குமூலம்.!