சுருதிஹாசன் போலி ஆபாச வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!



Shrutihasan deepfake incident judgment

நடிகை சுருதிஹாசனின் பெயர், புகைப்படம், உருவம் மற்றும் குரலை அவரது அனுமதியின்றி பயன்படுத்தி இணையத்தில் போலியான மற்றும் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்கள் பரப்பப்படுவதாக புகார் எழுந்தது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ‘Deepfake’ தொழில்நுட்பம் மூலம் சுருதிஹாசனின் முகத்தை ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் இணைத்து வெளியிட்டதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சுருதிஹாசன் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது பெயர், புகைப்படம், குரல் மற்றும் உருவத்தை அனுமதியின்றி பயன்படுத்தி வருவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதனால் தனது தனிப்பட்ட கண்ணியம் மற்றும் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இந்த வழக்கில் ரூ.15 கோடி இழப்பீடு கோரப்பட்டுள்ளது.

Shrutihasan

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ் ஜம்தார், சுருதிஹாசன் தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை பரிசீலித்தபோது, அவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான “மிகவும் வலுவான முதற்கட்ட வழக்கு” இருப்பதாகக் குறிப்பிட்டார். இதையடுத்து, சுருதிஹாசனின் கண்ணியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்குமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. திரையரங்குகளில் ‘GLADIATORS’ ட்ரெய்லர்!

மேலும், சுருதிஹாசனின் பெயர், உருவம், குரல் உள்ளிட்ட தனித்துவமான அடையாளங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதற்கும் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. AI மற்றும் Deepfake தொழில்நுட்பம் மூலம் பிரபலங்களின் அடையாளங்களை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான சட்டப் பாதுகாப்பு விவாதத்தில் இந்த உத்தரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு.. அஜித் குமார் பாராட்டு!