சூர்யாவின் 50வது படத்தை இயக்கும் வெற்றிமாறனின் உதவி இயக்குநர்? பரபரக்கும் புதிய தகவல்!



Surya in 50th movie update

நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், அவரது புதிய படம் தொடர்பாக சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. ‘மண்டாடி’ படத்தை இயக்கியுள்ள மதிமாறன் புகழேந்தி, சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். தற்போது சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் கடலோர மக்களின் வாழ்க்கை மற்றும் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

Surya 49

இந்த நிலையில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்கும் புதிய படம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அது சுமுகமாக முடிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘வாடிவாசல்’ திரைப்படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது.

இதையும் படிங்க: சூர்யாவுக்கு ஜோடியாகும் ‘டிசி’ பட நாயகி.. ஹெச்.வினோத் படத்தில் இணைந்த புதிய கூட்டணி!

இதற்கிடையே, இந்த புதிய படம் சூர்யாவின் 50வது படமாக அமையுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சூர்யாவின் 50வது படத்தை இயக்குவது தொடர்பாக நெல்சன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்களின் பெயர்களும் அடிபட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் சூர்யாவின் 50வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சுருதிஹாசன் போலி ஆபாச வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!