நடிகர் திலகம் சிவாஜியின் மகளும், நடிகர் பிரபுவின் மூத்த சகோதரியுமான சாந்தி காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகினர்....!!!



sivaji-ganesan-daughter-shanthi-passes-away

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகளும், நடிகர் பிரபுவின் மூத்த சகோதரியுமான சாந்தி இன்று காலை காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்ற சாந்தி

சாந்திக்கு கடந்த சில நாட்களாகவே கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையும் படிங்க: துக்க வீட்டிலும், சுப நிகழ்ச்சியிலும் விஜய் கூடவே இருக்கும் த்ரிஷா! அப்படி என்ன உறவு? அரசியலில் கண்ணியத்தை பாதிக்கிறது.... அதிமுக அமைச்சர் சண்முகநாதன் கடும் விமர்சனம்!!!

சிவாஜி குடும்பத்தினருக்கு திரையுலகினர் இரங்கல்

சாந்தியின் மறைவுச் செய்தி அறிந்ததும் சிவாஜி குடும்பத்தினர் மற்றும் தமிழ் திரையுலகினர் அதிர்ச்சியடைந்தனர். திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனால் சிவாஜி குடும்ப இல்லத்தில் சோகமான சூழல் நிலவுகிறது.

சாந்தி பெயரில் உருவான பிரபல திரையரங்கம்

மறைந்த சாந்தி மீது சிவாஜி கணேசன் மிகுந்த பாசம் கொண்டிருந்ததாக குடும்பத்தினர் தரப்பில் நினைவுகூரப்படுகிறது. அவரது நினைவையும் கௌரவத்தையும் போற்றும் வகையில் சென்னை அண்ணாசாலையில் இயங்கி வந்த புகழ்பெற்ற சாந்தி தியேட்டர் திரையரங்கிற்கு சிவாஜி கணேசன் அவரது பெயரை சூட்டியிருந்தார். சாந்தியின் மறைவு சிவாஜி குடும்பத்தினருக்கும், அவருடன் நெருக்கமாக இருந்த திரையுலகினருக்கும் பெரும் இழப்பாக அமைந்துள்ளது.

 

இதையும் படிங்க: கடைசி வரை கூடவே இருப்பியா சித்தப்பு? ஜேசன் சஞ்சய் கேட்ட கேள்வி... சிக்மா இசை வெளியீட்டு விழாவில் ஓப்பனாக பேசிய சஞ்சீவ்..!!!