நிர்வாணமாக கிடந்த தாயின் சடலம்....! உண்மையை மறைக்க மகனும், மருமகள் சேர்ந்து செய்த அசிங்கம்... பகீர் பின்ணணி..!!!



coimbatore-son-murders-mother-wife-arrested

கோவை மாவட்டத்தில் பெற்ற தாயைக் கத்தியால் குத்திக் கொன்ற மகனும், கொலையை மறைக்க முயன்ற மருமகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். முட்டத்துவயல் பகுதியில் 60 வயதான மீனாட்சி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்பத் தகராறு காரணமாக மதுபோதையில் இருந்த மகன் கொலை செய்ததாகவும், அதை மறைக்க மருமகள் நாடகமாடியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது

கோவை மாவட்டம் முட்டத்துவயல் காந்திஜி வீதியைச் சேர்ந்தவர் மீனாட்சி, 60. இவரது மகன் ஆனந்த் பாபு, 38. தாய் மற்றும் மகனுக்கு இடையே திருமணம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த நவம்பர் 24-ம் தேதி இரவு, மதுபோதையில் இருந்த ஆனந்த் பாபுவுக்கும் மீனாட்சிக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்த் பாபு, தாயைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலத்தை மறைக்க மருமகள் நாடகம்

சம்பவத்தன்று ஆனந்த் பாபுவின் மனைவி கல்பனா, 29, கோவிலுக்குச் சென்றிருந்தார். அவர் வீட்டுக்குத் திரும்பியபோது மீனாட்சி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததைப் பார்த்துள்ளார். இதையடுத்து கணவனை காப்பாற்றவும், கொலை நடந்ததை மறைக்கவும் மீனாட்சியின் ஆடைகளைக் களைந்து, அவர் ஆடைகளின்றி இறந்து கிடப்பதாக உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார் . கடந்த நவம்பர் 24-ம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் உறவினர்களுக்கு அவர் தகவல் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: ஏற்கனவே கீதாவுக்கு 3 திருமணம்..! இப்போ 4-வதாக கதிரவனுடன் கள்ளத்தொடர்பு! நகை, பணம் தகராறில் ஜெயிலுக்கு அனுப்பி ஜாமீனில் எடுத்த கீதாவுக்கு இறுதியில் நடந்த பயங்கரம்! பகீர் சம்பவம்..!!!

விசாரணையில் முரண்பாடு.. இருவரும் கைது

தகவலறிந்து வந்த உறவினர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீனாட்சி உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து ஆனந்த் பாபு மற்றும் கல்பனாவிடம் விசாரணை நடத்தியபோது, இருவரது பதில்களிலும் முரண்பாடுகள் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தாயைக் கொலை செய்ததை ஆனந்த் பாபுவும், கொலையை மறைக்க முயன்றதை கல்பனாவும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கொலை மற்றும் தடயங்களை மறைத்த குற்றச்சாட்டில் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இதையும் படிங்க: அப்படி இல்ல அண்ணே.. இப்படி செய்யுங்க..! கடைசில CM விஜய்க்கு நச்சுன்னு கன்னத்தில் முத்தமே கொடுத்துட்டான்..! வைரல் வீடியோ..!!!