அப்படி இல்ல அண்ணே.. இப்படி செய்யுங்க..! கடைசில CM விஜய்க்கு நச்சுன்னு கன்னத்தில் முத்தமே கொடுத்துட்டான்..! வைரல் வீடியோ..!!!
சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவில், முதலமைச்சர் விஜய்யிடம் மாணவி ஒருவரும் சிறுவன் ஒருவரும் அன்பை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான காட்சிகள் கவனம் பெற்றுள்ளன. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாணவர்களுடன் விஜய் உரையாடியபோது நடந்த இந்த நிகழ்வுகள் அரங்கில் உற்சாகத்தை ஏற்படுத்தின.
முதலமைச்சர் விஜய்க்கு முத்தமிட்ட மாணவி, சிறுவன்
சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விஜய் சான்றிதழ்களையும் ஊக்கத்தொகையையும் வழங்கினார்.
இதையும் படிங்க: சிறுவனுக்கு கேக்கை ஊட்டி விட்ட முதல்வர் விஜய் கேட்ட கேள்வி! குழந்தை கொடுத்த ரியாக்சன் தான் ஹைலைட்.... இணையத்தை கலக்கும் வீடியோ..!!!
விருது பெற மேடைக்கு வந்த மாணவி ஒருவர், 'எங்க அண்ணாவுக்கு...' என அன்புடன் கூறி விஜய்யின் அனுமதியுடன் அவரது கன்னத்தில் முத்தமிட்டார். இதேபோல், விருது பெற்ற சிறுவனும் விஜய்யுடன் உரையாடியபோது அவரது கன்னத்தில் முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். மாணவர்களின் இந்த அன்பான செயல்கள் விழாவில் இருந்தவர்களிடையே சிரிப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தின.
விலையில்லா மடிக்கணினி வழங்க கோரிக்கை
முன்னதாக, அந்தச் சிறுவனின் தந்தை முதலமைச்சர் விஜய்யிடம் பேசும்போது, 12-ஆம் வகுப்பை முடித்து உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களின் படிப்புக்கு உதவும் வகையில் அரசு சார்பில் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதைக் கேட்ட விஜய் புன்னகையுடன், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.
9 மாவட்ட மாணவர்களுக்கு 2-ம் கட்ட விருதுகள்
தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தொகுதி வாரியாக பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில், கடந்த நவம்பர் 4-ஆம் தேதி முதற்கட்ட கல்வி விருது விழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட விழா இரண்டு நாட்களாக நடைபெறுகிறது.
முதல் நாளில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதலமைச்சர் விஜய் விருதுகளையும் ஊக்கத்தொகையையும் வழங்கவுள்ளார்.
VIDEO | Chennai: A young boy greeted Tamil Nadu CM C. Joseph Vijay with a kiss on his cheek during an interaction at the TVK Education Awards function.
The boy’s father also requested CM Vijay to provide laptops to Class 12 students to support their higher education.
(Source: Third Party)
(Full video available on PTI Videos – https://t.co/bIyFWTfmBd)
— Press Trust of India (@PTI_News) November 26, 2026
இதையும் படிங்க: ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை...! CM விஜய் எடுத்த அதிரடி முடிவு..! இல்லத்தரசிகளுக்கு வெளியான ஹாப்பி நியூஷ்..!!!