அடிஆத்தி..! எவ்வளவு பெருசு... விவசாய நிலத்தில் பதுங்கியிருந்த 12 அடி நீளமும், 12 கிலோ எடையும் கொண்ட ராட்சத ராஜநாகம்..! பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன விவசாயி.. திக் திக் வீடியோ..!!!



12-foot-king-cobra-rescued-in-anakapalli

ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் சுமார் 12 அடி நீளமும், 12 கிலோ எடையும் கொண்ட பிரம்மாண்ட ராஜநாகம் தென்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி, பாம்பைக் கண்டதும் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சீடிக்கடா பகுதியில் தென்பட்ட இந்த ராஜநாகத்தை வனத்துறையினர் மற்றும் கிழக்கு வனவிலங்கு பாதுகாப்புக் குழுவினர் இணைந்து பாதுகாப்பாக மீட்டனர். பாம்பு சீறிய நிலையில் இருந்ததால், மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு அதை லாவகமாகப் பிடித்தனர்.

இதையும் படிங்க: அம்மாடியோவ்... எவ்வளவு பணம்..! எம்எல்ஏ வீட்டு திருமணத்தில் வாரி இறைத்த பணக்கட்டுகள்..! கைகளால் அள்ள முடியாமல் கடைசியில் அவர்கள் செய்த அந்த ஒரு காரியத்தை பாருங்க... வைரல் வீடியோ..!!!

12 அடி நீள ராஜநாகம் பத்திரமாக மீட்பு

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், ராஜநாகத்தை எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பிடித்தனர். பின்னர், அதை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர். இதையடுத்து விவசாயியும் அப்பகுதி கிராம மக்களும் நிம்மதியடைந்தனர்.

மற்ற பாம்புகளையும் வேட்டையாடும் ராஜநாகம்

ராஜநாகங்கள் பொதுவாக மற்ற பாம்புகளை உணவாகக் கொள்ளும் தன்மை கொண்டவை. மேலும், முட்டைகளை அடைகாப்பதற்காகக் கூடுகளை அமைக்கும் தனித்துவமான இயல்பும் இவற்றுக்கு உண்டு என வனவிலங்கு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பாம்புகளைக் கண்டால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுரை

பாம்புகள் குடியிருப்பு பகுதிகள் அல்லது விவசாய நிலங்களில் தென்பட்டால், பொதுமக்கள் அவற்றைத் தாங்களாகப் பிடிக்கவோ கொல்லவோ முயற்சிக்கக் கூடாது. உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்து, பாதுகாப்பான தூரத்தில் இருக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

இதையும் படிங்க: அதிசய காட்சி..! அடர்ந்த காட்டுக்குள் கம்பீரமாக காட்சியளிக்கும் பழங்கால கல் தேர்! மகாபாரத துரியோதனனின் கல் தேரா இது..? மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி..!!!